Skip to main content

பிச்சை எடுக்கவைத்த பேஸ்புக் காதல்!!

Published on 21/07/2018 | Edited on 21/07/2018

முகநூல் மூலம் உருவான காதல் இறுதியில் உணவிற்கு கையேந்தவைத்த  சம்பவம் நடந்துள்ளது. 

 

மேற்குவங்கம் டார்ஜிலிங்கை சேர்ந்த 11 வகுப்பு படிக்கும் ஒரு சிறுமி கடந்த ஜனவரி மாதம் 8-ஆம் தேதி காணாமல் போயுள்ளார். அவர் டியூசன் செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என பெற்றோர்கள் போலீசாரிடம் புகாரளித்து விசாரித்து வந்தனர். இந்த சம்பவம் நடந்து 7 மாதங்கள் கழித்து அண்மையில் அந்த சிறுமி ஒரு தொலைபேசியிலிருந்து தனது தாயிற்கு போன் செய்துள்ளார். தான் தமிழ்நாட்டிலுள்ள திருப்பூர் எனும் இடத்தில் உள்ளதாகவும் உணவின்றி பிச்சை எடுக்கும் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

facebook

 

 

இதன்பிறகு டார்ஜிலிங் போலீசார் மூலம் திருப்பூர் போலீசாரை தொடர்புகொண்ட பெற்றோர் அந்த சிறுமியை கைப்பற்றினர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் எங்கள் மாநிலத்தை சேர்ந்த புஜன் குரங் என்ற இளைஞருக்கும் எனக்கும் முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டது. நாட்கள் செல்ல செல்ல நாங்கள் மொபைல் நம்பரை பரிமாறிக்கொண்டோம்.  எங்கள் மாநிலத்தில் புஜன் குரங் இருந்தபோது  ஒருமுறை சந்திக்க நேர்ந்தது அப்போது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. ஆனால் நான் வேலை செய்ய திருப்பூர் செல்கிறேன் என கூறி சென்றார். மேலும் நான் உன்னை திருமணம் செய்துகொள்ளகிறேன் எனக்கூறினார் புஜன் குரங் எனவே அவரை நம்பி வீட்டிலுள்ள பணத்தை எடுத்துக்கொண்டு தமிழகம் வந்தேன். அங்கு சந்தித்த இருவரும் கேரளா கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு உல்லாச சுற்றுலா சென்றோம். கையில் இருந்த பணம் தீர்ந்ததால் இறுதியில் வேலை தேட ஆரம்பித்தோம். 

 

facebook

 

 

 

திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தோம் ஆனால் எங்களுக்கு சரியாக வேலை செய்யவராததால் சரியான ஊதியம் கிடைக்கவில்லை. எனேவ வேறு வழியில்லாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தோம். சரியான ஊதியம் இல்லாததால் எங்கே நான் விட்டு சென்று விடுவேனோ என எண்ணிய புஜன் குரங் என்னை வீட்டில் அடைத்து அடித்தான்.

 

 

இறுதியில் சாப்பிட சரியான உணவின்றி இறுதியில் அருகிலுள்ள வீடுகளில் பிட்சை எடுக்கும் நிலைக்கு ஆளானேன் பிறகு அருகிலிருந்தவர்களிடம் மொபைல் வாங்கி எனது தாயிற்கு போன் செய்தேன் என உருக்கமாக கூறியுள்ளார். அவரை  நேரில் சந்த்தித்த அவரது தாய் மகிழ்ச்சியில் அந்த கண்ணீர் வடித்தார். அவருக்கு புது உடைகள் வாங்கி தந்து அவரை சந்தோசப்படுத்தினார்.

 

படிக்கும் வயதில் முகநூல் சாட்டிங் டேட்டிங் என்று சீரழிந்து இறுதியில் உணவிற்கு கையேந்து நிலைக்கு தள்ளிவிட்டது இந்த முகநூல் காதல்.   

சார்ந்த செய்திகள்

Next Story

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடக்கம்; ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு கோடி இழப்பா? 

Published on 06/03/2024 | Edited on 07/03/2024
Too much loss per hour for Block Facebook, Instagram

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு, மார்க் ஜுக்கர்பெர்க் என்பவர் தொடங்கிய நிறுவனம் ஃபேஸ்புக். உலகம் முழுவதும் உள்ள இணைய பயனர்களுக்கு தங்களது கருத்துகள் மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான சமூக வலைத்தளமாக ஃபேஸ்புக் முன்னிலையில் உள்ளது. தற்போது, மார்க் ஜுக்கர்பெக் மெட்டா எனும் நிறுவனத்தைத் தொடங்கி அதன் கீழ் ஃபேஸ்புக் மற்றும் மற்றொரு பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை நிர்வகித்து வருகிறார்.

உலகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபலமான சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் செயல்பாடுகள், திடீரென்று உலகம் முழுவதும் நேற்று (05.03.2024) இரவு 9 மணியளவில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் வரை முடங்கியிருந்தது. சமூக வலைத்தள கணக்குகளின் பக்கங்கள் தானாகவே லாக் அவுட் (Logout) ஆகியதால் பயனர்கள் தவித்து வந்தனர். மேலும் தகவல் தொடர்பு கிடைக்காததால் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் இணையவாசிகள் அவதியடைந்தனர். இதனையடுத்து, தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்பட்டு 2 தளங்களும் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன. 

இந்நிலையில், மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் 1 மணி நேரம் முடங்கியதால் அமெரிக்க பங்குச் சந்தையில் மெட்டா பங்குகளின் சந்தை மதிப்பு 1.6 சதவீதம் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் 23,127 கோடி இழந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 

‘புளூம்பெர்க்’ என்ற நிறுவனம் நேற்று (05-03-24) வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் குறித்த புதிய பட்டியலில், 179 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் 4வது பெரும் பணக்காரராக மெட்டா சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க் இருந்தார். இதற்கிடையே, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் நேற்று 1 மணி நேரம் முடங்கியதால், மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் $2.79 பில்லியன் டாலர் குறைந்து தற்போது $176 பில்லியனாக உள்ளது. இருப்பினும், உலகின் நான்காவது பணக்காரர் என்ற நிலையை மார்க் ஜுக்கர்பெர்க் தக்க வைத்துள்ளார். 

Next Story

முன்னாள் காதலியைப் பார்க்க 3500 கி.மீ பயணித்த ஜி.எம். குமார்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
actor gm kumar drove 3500 kms to meet his ex

வெயில், குருவி, மாயாண்டி குடும்பத்தார், என பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜி.எம் குமார். பாலாவின் அவன் இவன் படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராக நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர். கடைசியாக கடந்த ஆண்டு கலையரசன் நடிப்பில் வெளியான புர்கா படத்தில் நடித்திருந்தார். இதனிடையே இயக்குநராகவும் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

அவரது எக்ஸ் பக்கத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருப்பது அவரது வழக்கம். அதில் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வரும் அவர், தற்போது தனது முன்னாள் காதலியை பார்க்க 3500 கி.மீ பயணித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மெட்ராஸிலிருந்து பெங்களூரு வழியாக கோவா சென்றுள்ளதாகவும் பின்பு பாம்பே சென்று மீண்டும் மெட்ராஸ் திரும்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது முன்னாள் காதலியுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அந்த பதிவு தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.