Advertisment

ஏழுமலையா அண்ணாமலையா?- குழம்பிய எடப்பாடி பழனிசாமி!

Ezhumalay or Annamalai? - Confused Edappadi Palanisamy!

அண்மையில்செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிக்கொண்டிருந்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக பாஜக குறித்து பேசுகையில், ''தமிழக பாஜக தலைவர் ஏழுமலை'' என்றார். உடனே அருகிலிருந்தவர்கள் அண்ணாமலை எனச்சொல்ல, சுதாரித்துக்கொண்ட எடப்பாடி பழனிசாமி 'அண்ணாமலை' என்றார். இந்த காட்சியை மட்டும் வெட்டி இணையவாசிகள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

Advertisment

ஏற்கனவே கடந்த 13 ஆம் தேதி சேலம் மாவட்டம் எடப்பாடியில் அதிமுக சார்பில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி பள்ளியை திறந்தது வைக்கும் நிகழ்ச்சிக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில் ''தினந்தோறும் காலை, மாலை என இரண்டு ஃஷிப்டுகளாக 10 பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி கொடுத்து மூன்று மாதத்திற்கு பிறகு நிறைவு சான்றிதழ் வழங்கப்படும். இதனால் பெண்கள் சுயமாக வேலைவாய்ப்பை மேற்கொண்டு குடும்பத்தை நடத்த 'அம்மாவின் அரசு' என கூறியவர், உடனடியாக ஆட்சியில் இல்லாததை சுதாரித்துக்கொண்டு அதிமுக இந்த திட்டத்தை ஏழை பெண்களுக்காகக் கொண்டு வந்துள்ளது'' என்று கூறியிருந்தது இதேபோல் ட்ரோல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisment

admk Annamalai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe