கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் தற்போது வரலாறு காணாத அளவில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.இந்தியா,சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா பரஸ்பர வரி அறிவித்துள்ள நிலையில் இன்று காலை இந்திய பங்கு சந்தை கடும் வீழ்ச்சியைக் கண்டது. அதேநேரம் தங்கத்தின் விலை மேலும் ஏற்றம் கண்டுள்ளது.
சவரன் தங்கம் 68,000 ரூபாயை கடந்துள்ளது வர்த்தக உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய (03/04/2025)நிலவரப்படிசென்னையைப் பொறுத்தவரை ஒரு கிராம் தங்கம் 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 8,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 400 ரூபாய் உயர்ந்து 68,480 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை 69 ஆயிரத்தை நெருங்கியுள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.