Advertisment

திபெத்தியர்களை தேடி விடுதிகளில் தீவிர சோதனை!

சீன அதிபர் ஜின் பிங் வரும் 11- ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தருகிறார். இந்நிலையில் சீன அதிபரின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த 8 திபெத்தியர்களை சென்னையில் நேற்று (07/10/2019) கைது செய்து சிறையில் அடைத்தனர் காவல்துறை.

Advertisment

 Extreme raids on hostels in search of Tibetans

அதன் தொடர்ச்சியாக இன்று (08/10/2019) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் திபெத்தியர்களை தேடி விடுதிகளில் தமிழக காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளன. மேலும் தனியார் விடுதிகள் மற்றும் கல்லூரி விடுதிகளிலும் திபெத்தியர்கள் உள்ளார்களா? என்று தீவிர விசாரணை. சீன அதிபர் வருகைக்கு எதிராக போராட்டம் நடப்பதை தடுக்க காவல்துறையினர் மற்றும் உளவுத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றன. அதேபோல் மாமல்லபுரம் சுற்றுலா தளம் மூடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தி கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

alt="tibetans" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="c2f527a3-8d88-4f2c-8d32-35a911d8bbc7" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500X300_2.jpg" />

Chennai china JIN PING mamallapuram President Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe