Skip to main content

பவானியில் வெள்ள அபாய எச்சரிக்கை... வெள்ளத்தில் மூழ்கிய புறணவயல் கிராமம் ... மீட்பு பணி தீவிரம்!!

Published on 04/08/2020 | Edited on 04/08/2020

 

 Extreme levels of flood danger were announced in Bhavani today

 

 

கோவை, நீலகிரி பகுதிகளில் தென்மேற்கு பருவக் காற்றால் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூரில் மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில் பவானிசாகர் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழையால் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 100 அடி கொண்ட பில்லூர் அணைக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் வருவதால் நீர்மட்டம் 95 அடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 97 அடியை எட்டும்போது அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படும் என்பதால் அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு ஆட்சியர் ராசாமணி அறிவுறுத்தியுள்ளார். அதேபோல் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,916 அடியிலிருந்து 6,817 அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 86.14 அடியாக உள்ளதால் நீர் இருப்பு 19.16 டி.எம்.சி. ஆக உள்ளது. நீர் திறப்பு 300 அடியாக அதிகரித்துள்ளது. மேலும் கூடலூர் காலம்பூழா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நீலகிரி கூடலூர் பகுதியில் கனமழை காரணமாக காலம்பூழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. புறணவயல் பழங்குடியினர் கிராமம் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கியது. வெள்ளத்தில் தவித்த சுமார் 30 பேரை வருவாய் துறையினர் மீட்டு நிலையில் மற்றவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

அதிகபட்சமாக நீலகிரி கூடலூரில் 20 சென்டிமீட்டர் மழையும் தேவாலயாவில் 10 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முற்றுகைக்கு ரெடியான நிர்வாகி கைது; தொடரும் கீழ்பவானி வாய்க்கால் நீர் திறப்பு பேச்சுவார்த்தை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Executive arrested for siege; Negotiations on the opening of water by the Kilpawani canal continue

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்தில் 5-வது நினைப்புக்கு ஏப்ரல் 18ஆம் தேதி முதல் 13 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால் இந்த 5வது நினைப்புக்கு தண்ணீர் திறப்பது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியிடாததால் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில் இதுவரை அறிவிப்பு வெளியிடாததால் நேற்று காலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கீழ்பவானி வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவியை சென்னிமலை போலீசார் அவர் வீட்டில் இருந்து கைது செய்து சென்னிமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்திருந்தனர். இதையடுத்து கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் சுதந்திர ராசு, வெங்கடாசலம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் சென்னிமலையில் குவிந்தனர். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 5வது இணைப்புக்கு தண்ணீர் திறப்பது குறித்து வரும் 20 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி, சுமூக முடிவு எட்டப்படும் எனத் தெரிவித்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளர் ரவி விடுவிக்கப்பட்டார்.

Next Story

ராகுல் காந்தி பயணித்த ஹெலிகாப்டரில் சோதனை!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Rahul Gandhi's helicopter was tested

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள், அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி இன்று (15.04.2024) நீலகிரி மாவட்டம் பந்தலூர் வந்தடைந்தார். அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொண்டனர். ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து தேவாலயம் செல்லும் ராகுல் காந்தி அங்குள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார். கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு செல்லும் வழியில் பந்தலூர் பகுதிக்கு ராகுல் காந்தி வருகை புரிந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நீலகிரியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதற்காக ஹெலிகாப்டர் மூலமாக உதயநிதி ஸ்டாலின் நேற்று (14.04.2024) நீலகிரி வந்திருந்தார். அப்போது அவர் வந்த ஹெலிகாப்டரையும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.