தமிழகத்தில் நாளை (20.04.2021) முதல் அமல்படுத்தப்படும் இரவுநேர ஊரடங்கின்போது தனியார் மற்றும் பொது போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸிக்கு அனுமதி இல்லை என்றும், மருத்துவம் போன்ற அவசர தேவைக்கு மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி போன்றவை அனுமதிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் சிரமங்களை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், பொதுமக்களின் சிரமங்களைப் போக்கும் வகையில் பகல் நேரத்தில் கூடுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்று ஆம்னி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பகல் நேரங்களில் கூடுதல் பேருந்துகள் - ஆம்னி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!
Advertisment