/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/49_23.jpg)
திருச்சி மாவட்டம், கே.கே.நகரில் திருமலை சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் 26 வயதான பூபதி. இவர் தென்னூரில் ஹெவன் ஆயுர்வேத கிளினிக் என்ற பெயரில் கிளினிக் நடத்தி வருகிறார். இந்த நிலையில், கிளினிக்கிற்கு சென்ற பாலக்கரை எடத்தெருவைச் சேர்ந்த கார்த்திக் (வயது 29) மற்றும் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் பூபதியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போன், இருசக்கர வாகனத்தைப் பறித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து பூபதி கே.கே.நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் மீது ஏற்கனவே கண்டோன்மெண்ட், எடமலைப்பட்டி புதூர், காந்தி மார்க்கெட், பாலக்கரை, தில்லைநகர், மணப்பாறை ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)