
அண்மையில்மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசின் மின்சாரத் துறை தெரிவித்திருந்த நிலையில், இதற்கான சிறப்பு முகாம் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. தொடர்ந்து பொதுமக்கள் ஆதார் எண்களை மின் கணக்குடன் இணைத்து வந்தனர். இந்நிலையில் ஆதாரை மின் கணக்குடன்இணைப்பதற்கு கால அவகாசம் கொடுத்துள்ளது தமிழக அரசு. தற்பொழுது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சூடுபிடித்து அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ''ஆதாரை மின் கணக்குடன் இணைக்க பிப். 28ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் ஆதாரை மின் கணக்குடன் இணைக்க அவகாசம் நீட்டிக்கப்படாது. இதுவரை 2.60 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துள்ளனர்'' எனத்தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)