Advertisment

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு... முதல்வர் அறிவிப்பு!

Extension of curfew in Tamil Nadu ... Chief Minister's announcement!

தமிழகத்தில் கரோனா ஊரடங்கு டிசம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட இருப்பதாகத் தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Advertisment

கரோனா காரணமாகதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கொண்டுவரப்பட்டு தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. கடந்த அறிவிப்புகளில் பள்ளிகள் திறப்பு, கோவில் உள்ளிட்ட மத வழிபாடுகளுக்கு அனுமதி போன்ற தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது டிசம்பர் 15 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னர் தமிழகத்திலிருந்து ஆந்திர, கர்நாடகாவுக்கு பொதுப்போக்குவரத்து அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த தளர்வில் தமிழகம்- கேரளம் இடையே பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளக் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisment

ஒமிக்ரான் வகை கரோனாவை தடுக்க கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியர்களுக்குத் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இந்த ஊரடங்கு நீட்டிப்பு கவனம் பெறுகிறது.

OMICRON health Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe