Advertisment

35 நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் ‘பொறையார் இஞ்சி பக்கோடா’- வெளிநாட்டினரையும்  சுண்டியிழுத்த சுவை!

g

மார்க்கெட்டில் புதிது புதிதாக தின்பண்டங்கள் விற்பனைக்கு முளைத்துக்கொண்டே இருந்தாலும் பழங்கால தின்பண்டங்களுக்கு இணையாகுமா என சவால் விடுகின்றனர் பொறையாறு இஞ்சி பக்கோடா தயாரித்து விற்பவர்கள்.

Advertisment

மருத்துவக் குணம் மிகுந்த மூலப் பொருட்களைக் கொண்டு பாரம்பரிய முறையில் செய்வதால், அதன்மீதான கெராக்கி கூடிக்கொண்டே இருக்கிறது. உடல் நலத்திற்கு மிக ஏற்றதாக இஞ்சி பக்கோடா இருப்பதால் வெளிமாவட்டத்தினரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

Advertisment

ganthi

நாகை மாவட்டம் பொறையாரில் இருக்கிறது முகமது அலி குடும்பம். அவர்களின் பரம்பறையான கைப்பக்குவம் தான் இஞ்சி பகோடா. அந்த பகுதிகளின் விழாக்களிலும் பண்டிகைகளிலும் விருந்து உபசரிப்பிலும் முக்கிய இடம் வகிப்பதும் இஞ்சி பக்கோடா தான். நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மக்களிடையே சுழண்டடித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும் வாடிக்கையாளர்களும், பொதுமக்களும் இஞ்சி பக்கோடாவை விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

கூட்டம் கலைகட்டி நிற்க எப்படித்தயாரிக்கிறார்கள் என்பதை சற்று ஒரமாக நின்று பார்த்தோம், "இஞ்சி, பூண்டு, சோம்பு, கிராம்பு, பட்டை ஆகிய மருத்துவக் குணமிக்க பொருட்களை உரலிலேயே இடிக்கின்றனர். பின் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் உள்ளிட்ட பொருட்களோடு பக்குவமாக பிசைகின்றனர். பின்னர் சுத்தமான சமையல் எண்ணெய்யில் கைகளாலேயே பொரித்து எடுக்கின்றனர். பொரித்த பக்கோடாவை மீண்டும் மறுமுறையும் பொரிக்கின்றனர், அப்போது தான் முழுமையாக வெந்து இருக்கும் என்கிறார்கள்.

g

இது குறித்து பக்கோடாவை லாவகமாக சாரணியால் அள்ளிக்கொண்டிருந்தவரிடமே கேட்டோம் " ஒருமுறை பயண்படுத்திய எண்ணைய்யை மீண்டும் பயன்படுத்துவது கிடையாது. காரம் எண்ணெய்யில் இறங்கி விடுவதால் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவது கிடையாது. கை பக்குவமாக, எந்தவித கலப்பட முமின்றி மருத்துவக் குணங்கள் நிறைந்தபொருட்களைக் கொண்டே தயாரிப்பதால் மக்கள் விரும்பி வருகின்றனர். தினமும் முன்கூட்டியே ஆர்டர்கள் செய்து வாங்கிச் செல்கின்றனர். மேலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரையும் கவர்ந்த எங்கள் இஞ்சி பகோடா ரஷ்யா, அமெரிக்கா, தென்ஆப்பிரிக்கா, ஜெர்மனி, சிங்கப்பூர், மலேசியா என 35 நாடுகளுக்கும் மேல் செல்கிறது". என சிலாகித்து கூறுகிறார் முகமது அலி.

" எங்க குடும்பத்தினர் பல தலைமுறையாக இத்தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்.நாள்தோறும் சென்னை, திருச்சி விமான நிலையங்களிலிருந்து வெளி நாடுகளுக்கு செல்லும் 5 க்கும் மேற்பட்ட நபர்களிடமாவது பொறையாறு இஞ்சி பக்கோடா நிச்சயமாக இருக்கும். கடந்த 10 ஆண்டு க்கு முன்பு கிலோ 200 ரூபாய்க்கு விற்ற பக்கோடா இன்றும் அதே விலையிலேயே விற்கிறோம். ஆனால் பக்கோடா தயாரிப்புக்கு தேவைப்படும் மூலப் பொருட்கள் கடுமையாக விலை உயர்ந்தாலும் லாபமே இன்றி பேருக்காகவே தொடர்ந்து இஞ்சி பக்கோடாவை தயாரித்து கொடுக்கிறோம், " என்கிறார் ஜின்னா.

எத்தனை ஊருக்குப்போனாலும் தமிழனின் உணவுக்கு ஈடாகுமா, என்பதை இஞ்சிப்பக்கோடா மூலம் பரைசாற்றுகிறது என்பதில் நமக்கும் பெருமை தான்.

ginger pakkooda
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe