Advertisment

கனியாமூர் பள்ளியில் வெடிபொருளா...? போலீசார் விசாரணை!

Explosives found in Kaniamoor school... Police investigation!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பாக அங்கு நடைபெற்ற கலவரத்தில் பேருந்துகள், பள்ளி வகுப்பறைகள் உள்ளிட்டவைத் தீக்கிரையாக்கப்பட்டன. இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணை நடத்தி வருகிறது. கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியை மறு பள்ளியை சீரமைப்பது தொடர்பாக 10 நாட்களில் ஆட்சியர் முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பள்ளியை சீரமைக்க அனுமதி வழங்கி இருந்தார்.

Advertisment

மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் விடுதி பகுதியில் நாட்டு துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் இருந்ததாகதகவல்கள் வெளியான நிலையில், இதுதொடர்பாக போலீசார் நடத்தியவிசாரணையில் அது கருஞ்சீரகம் என தெரியவந்தது.

Advertisment

police kallakurichi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe