Advertisment

பைக்கில் பட்டாசு எடுத்துச் சென்றபோது வெடி விபத்து; இளைஞர் உயிரிழப்பு

Explosion while carrying firecrackers on bike; Youth mortality

உளுந்தூர்பேட்டை அருகே இருசக்கர வாகனத்தில் பட்டாசு எடுத்துச் சென்றபோது ஏற்பட்ட வெடி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள எறையூர் பகுதியைச்சேர்ந்த டேவிட் வில்சன் மற்றும் ஆண்டனி பிரேம்குமார், பவுல்ராஜ் ஆகிய மூவரும் நேற்று இரவு எட்டு முப்பது மணியளவில் இருசக்கர வாகனத்தில் பட்டாசுகளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்பொழுது சென்று கொண்டிருந்த வழியில் சிலர் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அதில் ராக்கெட் பட்டாசு ஒன்று இருசக்கர வாகனத்தில் இவர்கள் வைத்திருந்த பட்டாசின் மீது விழுந்து வெடி விபத்து ஏற்பட்டது.

Advertisment

இதில் டேவிட் வில்சன், ஆன்டனி பிரேம்குமார், பவுல்ராஜ் ஆகிய மூவரும் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் உடனடியாக மூன்று பேரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். இதில் டேவிட்சன் (22) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் இரண்டு இளைஞர்கள் படுகாயத்துடன் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதுகுறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

diwali police Bikers ulundurpet crackers
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe