புதுச்சேரி அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அருகே இருசம்பாளையம் என்ற கிராமத்தில் நடந்துகொண்டிருந்த திருவிழாவில் தீப்பந்தம் சுற்றும் சாகச நிகழ்ச்சி ஒன்றை இளைஞர் மேற்கொண்டிருந்த நிலையில் தீப்பொறி பாட்டு வானவேடிக்கைக்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் சிதறி வெடித்தது. எதிர்பாராத விதமாக நடந்த இந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காகக் கடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். திருவிழாவில் இளைஞர் ஒருவர் தீப்பந்தம் சுற்றும் காட்சியும் அதனைத்தொடர்ந்து வெடி விபத்து ஏற்படும் காட்சியும்சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.