/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1003_32.jpg)
சிவகாசி மாவட்டம் ஆணையூர் பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
சிவகாசி மாவட்டம்ஆணையூர்அருகே பட்டாசு தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. 25 அறைகள் கொண்ட இந்ததொழிற்சாலையில்100க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.இங்குஅனைத்து விதமானபட்டாசுகளும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்றுவழக்கமாகபணியாளர்கள் தங்களது பணியை மேற்கொண்டுவந்தனர். அப்போது பட்டாசுக்கு மருந்து செலுத்தும் அறையில் வெடி விபத்து நடந்துள்ளது. அதன் மூலம் அந்த மருந்து செலுத்தும் அறையும்,அதற்குபக்கத்திலிருந்தஅறையும் இடிந்துதரைமட்டமாகியுள்ளன. இதில் மருந்து செலுத்தும்பணியிலிருந்தஇருளாயி,அய்யம்மாள், குமரேசன்,சுந்தர்ஆகிய நான்கு பேரும் படுகாயமடைந்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் தீயை அணைத்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெயிலின் தாக்கத்தால் மூலப்பொருட்களின்மீது ஏற்பட்டஉராய்வின்காரணமாக இந்த விபத்து நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணைநடத்திவருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)