Advertisment

சாத்தூரில் வெடி விபத்து... 5 வயது சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழப்பு! 

Explosion in Sattur ...

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்தபோது நிகழ்ந்த வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

சாத்தூர் அருகிலுள்ள தாயில்பட்டி என்ற கிராமத்தில் கலைஞர் காலனி என்ற பகுதியில் பிரபாகரன் என்பவர் சட்டவிரோதமாக சிறிய ரக பட்டாசுகளை வீட்டிலேயே தயாரித்துவந்துள்ளார். இந்நிலையில், இன்று (21.06.2021) காலை இராசாயன உராய்வு காரணமாக திடீரென அங்கு வெடிவிபத்து ஏற்பட்டது. வெடி விபத்தில் கற்பகம், செல்வமணி என்ற இரண்டு பெண்களும் ஐந்து வயதான சல்மான் என்கின்ற சிறுவனும் உயிரிழந்தனர்.

Advertisment

முறையான அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டதாக பிரபாகரன், அப்பல்லோ, சூர்யா ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று பேரில் அப்பல்லோ என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பிரபாகரன் மற்றும் சூர்யாவை போலீசார் தேடிவருகின்றனர். இந்த வெடிவிபத்து சம்பவம் மீண்டும் விருதுநகரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

police fire works incident Virudhunagar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe