Explosion at fireworks factory - 3 lose their live

விருதுநகரில் பட்டாசு ஆலையில்ஏற்பட்டவெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விருதுநகர் மாவட்டம் காரிப்பட்டி அருகே ராஜா சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கும் பணியின்போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூன்று பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எவ்வளவோ கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் விருதுநகரில் பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்படுவதும் அதனையொட்டி உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர்கதையாகி வருவது அந்த பகுதி மக்களுக்கு அச்சத்தைக் கொடுத்து இருக்கிறது.