Advertisment

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து... ஒருவர் உயிரிழப்பு!

Explosion in the firecracker factory... incident in virudhunagar

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்கதையாகி வரும் நிலையில் இன்று நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Advertisment

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கிழான்மலைநாடு கிராமத்தை அடுத்துள்ளது வளையப்பட்டி. இங்கு முத்துமீனா என்ற பாட்டாசு ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலையில் இன்று மதியம் மூன்று மணிக்கு மேல் 12 பேர் வேலை செய்துகொண்டிருந்த நிலையில் அங்கு ஒரு பட்டாசு தயாரிப்பு அறையில் ஏற்பட்ட விபத்தில், சிக்கி ஜெயராமன் என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். அவருடன் பணியிலிருந்த புவனேஸ்வரன் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெம்பக்கோட்டை தீயணைப்புத் துறையின் போராடி தீயை அணைத்து வருகின்றனர். தடை செய்யப்பட்ட வெடிமருந்துகளை பயன்படுத்தியதால்இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment

Virudhunagar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe