Skip to main content

தீபாவளிக்கு வாங்கும் சுவீட் கெட்டுப் போயிருந்தால் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்... திருச்சி அஸ்வீன் சுவீட் கடையில் அச்சு முறுக்கில் பூசனம் பூத்திருப்பதாகப் புகார்!!! 

Published on 02/11/2018 | Edited on 02/11/2018
experied food

 

தீபாவளி சீசன் நேரத்தில் திருச்சியில் ஒரு ஸ்வீட் கடையில் அச்சுமுறுக்குப் பூசனம் பூத்து இருப்பதைப் பார்த்து வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்து புகார் செய்திருக்கிறார். 
 

சட்டகல்லூரியில் பேராசிரியராக இருப்பர் முருகேஷன் இவர் திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள அஸ்வீன் ஸ்வீட் கடைக்குச் சென்றிருக்கிறார். அங்குத் தீபாவளியை முன்னிட்டு அச்சு முறுக்குப் பாக்கெட் ஒன்றை வாங்கிச் சென்றிருக்கிறார். 
 

வீட்டிற்குச் சென்று தன்னுடைய குழந்தைக்கு ஆசையாக எடுத்துப் போது அந்தப் பாக்கெட்டில் உள்ள அச்சு முறுக்குப் பூசம் பூத்து போய் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து. திரும்பவும் கே.கே.நகர் கடைக்குக் கொண்டு வந்து திரும்ப இவ்வளவு பெரிய கடையில் நீங்கள் கொடுத்த இந்த முறுக்கு ஏன் இப்படி இருக்கிறது என்று கேட்க கடையின் நிர்வாகமோ இல்ல அது பழைய பாக்கெட்டாக இருக்கும் என்று மறுக்க இல்ல நீங்களே பாருங்க என்று கொடுக்க உற்பத்தி செய்து 1 மாதம் ஆகியிருப்பதாகத் தேதி இருப்பதைப் பார்த்து அஸ்வீன் ஊழியர்கள் சாரி சார் தவறு நடந்திருக்கிறது என்று மன்னிப்புக் கோரியிருக்கிறார்கள். 
 

கோபமான பேராசிரியர் என்ன சார் இவ்வளவு ஈசியா சாரி சொல்றீங்க இந்த அச்சு முறுக்கு உங்க கடை பிரபலமாகக் காரணம் அப்படிப் பட்ட அச்சு முறுக்கை இப்படிக் கவனக்குறைவாகப் பூசம் பூத்து எங்களுக்குக் கொடுத்திருக்கீறீர்கள். அதைக் குழந்தை சாப்பிட்டிருந்தால் என்ன ஆயிருக்கும் என்று அதை நினைத்து பார்த்தீர்களா? என்று சொல்லி உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்குப் புகார் செய்திருக்கிறார். 
 

இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் இது குறித்துப் பேசிய போது அவர்கள்.. இந்த மாதிரி விழாக்காலங்களில் சுவீட் போன்ற உணவு திண் பண்டங்கள் வாங்கும் போது உணவு பண்டங்களில் கெட்டுப் போன பொருட்கள் இருப்பதைப் பார்த்தால் 9444042322 என்கிற எண்ணிற்குக் கெட்டு போன பொருளையும் அந்தக் கடையை உடனே படம் பிடித்து வாட்ச்ஆப்பில் புகார் செய்யவும் என்று அறிவுறுத்தினார்கள். அஸ்வீன் சுவீட் கடையின் நிர்வாகம் தங்கள் வழங்கிய அச்சு முறுக்கில் பாசனம் பூத்து இருப்பமாக எழுதியும் கொடுத்திருக்கிறார்கள். 
 

பெரம்பலூரை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த அஸ்வீன் சுவீட் திருச்சி, பெரம்பலூர் பகுதியில் 10 இடங்களுக்கு மேல் கிளை வைத்திருக்கும் கடை பிரபலமடையக் காரணமாக இருந்த அச்சு முறுக்கிலே பிரச்சனை என்பது அதிர்ச்சியளிக்கும் விசயமாக இருக்கிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திரவ நைட்ரஜன் உணவுப் பொருள்; உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
liquid nitrogen foodstuff; Food Safety Department action order

திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க கூடாது என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன் பிஸ்கட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தான். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள் விற்கக் கூடாது என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. திரவ நைட்ரஜன் உணவுப்பொருள் விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கு நைட்ரஜன் ஐஸ் கலந்த எந்தவொரு உணவு பொருள்களையும் கொடுக்கக் கூடாது எனவும், உணவு விடுதிகளில் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story

'பஞ்சுமிட்டாய் போல தடை செய்யப்படுமா நைட்ரஜன் பிஸ்கட்?-அதிர்ச்சியை ஏற்படுத்திய சிறுவனின் வீடியோ

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
'Will Nitrogen Biscuits be Banned Like Cotton Candy'- Boy's Shocking Video

நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன்  பிஸ்கட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

அண்மையில் சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தான். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதில் அந்தச் சிறுவன் உயிரிழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

திரவ நைட்ரஜனை பிஸ்கட் உடன் சேர்த்து சாப்பிடும் பொழுது புகைப்பது போன்று வாய் மற்றும் மூக்கில் இருந்து புகை வரும். இதை ஒரு ஃபன் ஆன உணவாக பல்வேறு பொது இடங்களில் மற்றும் சுற்றுலா தளங்களில் விற்கப்பட்டு வருகிறது. கோவை, திருச்சி, சென்னை தீவுத் திடல் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் பொருட்காட்சிகளில் நைட்ரஜன் பிஸ்கட் விற்கப்படுவதைப் பார்க்க முடிகிறது. திரவ நிலையில் மைனஸ் 196 செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கும் திரவ நைட்ரஜன் பிஸ்கட்டில் சேர்த்து பயன்படுத்துவது ஆபத்து என்கின்றனர் உணவுத்துறை வல்லுநர்கள்.

பொதுவாக உணவுப் பொருள்களை உறைய வைக்கவே ஆண்டாண்டு காலமாக திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உணவுப் பொருட்களைப் பதப்படுத்துவதற்கு திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்டாலும் அது ஆபத்து நிறைந்ததாகவும் உள்ளது. ஒரே நொடியில் பொருட்களை உறைய வைக்கும் தன்மை கொண்டது. திரவ நைட்ரஜனை சிறிது திரவ நிலையில் எடுத்துக் கொண்டாலும் வயிற்றில் சென்று திரவ நைட்ரஜன் எவாபரேஷன் நடைபெற்று கடும் உடல் உபாதை ஏற்படுத்துவதோடு மரணத்திற்கும் இட்டுச் செல்லும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறைந்த அளவில் திரவ நைட்ரஜனை குறைவாக பயன்படுத்தும் பொழுது எந்த ஆபத்தும் இருக்காது எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் வெளியாகிய  இந்த வீடியோ பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அண்மையில் பஞ்சு மிட்டாயில் உள்ள நிறமி வேதிப்பொருள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என உறுதி செய்யப்பட்ட நிலையில் அதனை அரசு தடை செய்திருந்தது குறிப்பிடத் தகுந்தது.