exotic  Ayurvedic treatment center

Advertisment

கோவை, ஜி.என்.மில்ஸ், ஆசிரியர் காலனி பகுதியில் கேரலீயம் ஆயிர்வேத சிகிச்சை மையம் என்ற பெயரில் மசாஜ் செண்டர் ஒன்று இயங்கிவந்தது. இதை கேரளாவைச் சேர்ந்த தீபுமேத்யூ என்பவர் நடத்தி வந்தார்.இங்கு கேரள ஆயிர்வேத சிகிச்சை என்ற போர்வையில் பாலியல் தொழில் செய்து வருவதாக துடியலூர் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது.

அதைத் தொடர்ந்து பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் துடியலூர் உதவி காவல் ஆய்வாளர் பாண்டியம்மாள், அந்த சிகிச்சை மையத்திற்கு சோதனை செய்வதற்காக சென்றார். போலீசார் வருவதை பார்த்தவுடன் அங்கிருந்தவர்கள் தப்பி ஓட முற்பட்டனர். அதில், பிரவீன்குமார், செல்வின், மோகன்ராஜ் ஆகிய மூன்று புரோக்கர்கள் பிடிபட்டனர். இந்த மசாஜ் செண்டரின் உரிமையாளர் தீபுமேத்யூ தலைமறைவாகியுள்ளார்.

Advertisment

exotic  Ayurvedic treatment center

அங்கு பூட்டப்பட்டிருந்த ஓர் அறையை திறந்த போது அங்கு ஆந்திரா, சென்னை, கோவையைச் சேர்ந்த 4 பெண்களும், அவர்களுடன் இருந்த 4 ஆண்களையும் பிடித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கோவை ஜி.என்.மில்ஸ் ஆசிரியர் காலனி பகுதியில் கேரலீயம் ஆயிர்வேத சிகிச்சை மையம் என்ற பெயரில் கேரளாவைச் சேர்ந்த தீபுமேத்யூ என்பவர் கேரளா, ஆந்திரா, சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழில் செய்து வந்ததும்,அவருக்கு ஆண்களை அழைத்து வரும் புரோக்கர்களாக பிரவீன்குமார், செல்வின், மோகன்ராஜ் செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து 3 புரோக்கர்கள் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தது போலீஸ்.அவர்களை கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள மசாஜ் செண்டர் உரிமையாளர் தீபூமேத்யூவை போலீஸ் தேடிவருகிறது.