peiyasamy

முன்னாள் முப்பெரும் துறை அமைச்சரும், திமுக துணை பொதுச்செயலாளரும், ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பெரியசாமி திண்டுக்கல்லில் குடியிருந்து வருகிறார். ஆனால் அவரது சொந்த ஊரான வத்தலக்குண்டில் தான் தாயார் அலமேலு அம்மாள் வசித்து வருகிறார் இருந்தாலும் வாரத்திற்கு இரண்டு, மூன்று தடவையாவது தாயார் அலமேலு அம்மாளை பார்த்து விட்டு அவருடன் சிறிது நேரம் பேசி விட்டு வருவது வழக்கம்.

இதேபோல், தனது பிறந்த நாள் அன்று எங்கு இருந்தாலும் உடனே புறப்பட்டு வந்து வத்தலக்குண்டில் தனது தாயாரிடம் ஆசி வாங்குவதும் நடைமுறையாகவே கடைப்பிடித்து வருகிறார். அந்த அளவுக்கு அவர் தனது தாயாரிடம் பாசம் காட்டி வந்தார்.

Advertisment

இந்த நிலையில் தான் 90வயது ஆன பெரியசாமியின் தாயார் அலமேலு அம்மாளுக்கு கடந்த ஒரு மாதமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தார். அப்படி இருந்தும் கூட அவர் தனது தாயாரை காப்பாற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் திண்டுக்கல் மற்றும் மதுரையில் இருந்து டாக்டர்களை அழைத்து வந்து வத்தலக்குண்டு வீட்டிலையே தீவிர சிகிச்சை அளித்தார். அப்படி இருந்தும் உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்த அலமேலு அம்மாள் தீடீரென நேற்று இரவு காலமனார்.

இந்த விஷயம் கட்சி பொறுப்பாளர்களுக்கும், தொண்டர்களுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் தெரியவந்ததையடுத்து பெரியசாமியின் தாயார் உடலுக்கு மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தி வருகிறார்கள். இந்த தகவலை திமுக செயல் தலைவரான ஸ்டாலினுக்கு தெரிய படித்தியதின் பேரில் ஸ்டாலினும் வந்து மரியாதை செலுத்த இருக்கிறார்.