Skip to main content

சத்துமாவு கஞ்சியில் பல்லியா? 29 பேர் மயக்கம்... நெய்க்குப்பியில் பரபரப்பு! 

Published on 27/05/2022 | Edited on 27/05/2022

 

excitement in neikuppi Anganwadi!

 

விழுப்புரத்தில் அங்கன்வாடியில் கொடுக்கப்பட்ட சத்துணவு கஞ்சியில் பல்லி விழுந்ததாக கூறப்படும் நிலையில், 13 குழந்தைகள் உட்பட 29 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த நெய்குப்பி என்ற கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் வளரும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு சத்து மாவு கஞ்சி வழங்கப்படுவது வழக்கம். வழக்கம் போல் இன்றும் சத்துமாவு கஞ்சி வழங்கப்பட்டது. அதனை குடித்த 13 குழந்தைகள் உட்பட 29 பேருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக 29  பேரும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த திண்டிவனம் சார் ஆட்சியர் அமித் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் 29 பேரின் உடல் நலம் குறித்து விசாரித்தார். சத்துமாவுக்  கஞ்சியல் பல்லி விழுந்ததாக தகவல்கள் வெளியாகி அது குறித்தும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; அதிமுக நகர செயலாளர் கொலை!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
 AIADMK official who cheated by promising to get a job was passed away
வெங்கடேசன்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அதிமுக நகர  செயலாளராக  வெங்கடேசன் என்பவர் கட்சி பதவி வகித்து வருகிறார். இவரிடம் செஞ்சி திருவண்ணாமலை சாலையில் எஸ்.பி.ஐ வங்கி எதிரில் டீக்கடை நடத்திவரும் ராஜேந்திரன் என்பவர் தனது மனைவி கல்பனாவுக்கு சத்துணவு அமைப்பாளர் வேலை கேட்டு கடந்த அதிமுக ஆட்சியில் 3 லட்சம் பணம் தந்துள்ளார். வேலை வாங்கித்தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை என்று கூறப்படுகிறது.

ராஜேந்திரன், கல்பனா இருவரும் பலமுறை அவர் வீட்டுக்குச் சென்று பணம் கேட்டுள்ளனர். ஆனால் பணம் தராமல் இழுத்தடித்துள்ளார். இதற்கிடையே கல்பனா வெங்கடேசன் இடையே திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இது ராஜேந்திரன் குடும்பத்தில் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வெங்கடேசன் - ராஜேந்திரன் இடையே முன்விரோதம் அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் மார்ச் 16 ஆம் தேதி இரவு வெங்கடேசன் வங்கியில் ஏ.டி.ம். மையத்திற்கு பணம் எடுக்கச் சென்றதாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி கல்பனா ஆகியோர் வெங்கடேசனிடம் பிரச்சனை செய்துள்ளனர். அப்போது ராஜேந்திரன் கல்லை எடுத்து வெங்கடேசன் தலையில் பலமாக தாக்கியதில் தலையில் ரத்தம் சொட்ட சொட்ட வெங்கடேசன் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.

பின்னர் கல்லால் தலையில்  தாக்கியதில் பலத்த ரத்த காயம் அடைந்த வெங்கடேசனை மீட்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக  புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் மார்ச் 17 ஆம் தேதி உயிரிழந்தார்.

இது குறித்த தகவலின் பெயரில் செஞ்சி காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ராஜேந்திரனை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து  வழக்கு பதிவு செய்த செஞ்சி போலீசார் ராஜேந்திரன்  மற்றும் அவரது மனைவி கல்பனா ஆகியோர் மீது கொலை  வழக்கு பதிவு செய்துள்ளனர்.  ராஜேந்திரன் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது மனைவி கல்பனாவை செஞ்சி போலீசார் தனிப்படை அமைத்து  தேடி வருகின்றனர்.அதிமுக செஞ்சி நகர கழக செயலாளர் கொலையால் செஞ்சி பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. அதிமுக நிர்வாகிகளிடையே இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

டன் கணக்கில் பிடிபட்ட போலி இஞ்சி பேஸ்ட்; பொதுமக்களே உஷார்

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
Tons of fake ginger paste caught; Public beware

உணவு பொருள்களின் தரம் மற்றும் தரமற்ற உணவுப் பொருட்கள், போலியான கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் குறித்த வீடியோக்கள், தகவல்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவி வரும் நிலையில், ஹைதராபாத்தில் டன் கணக்கில் போலி இஞ்சி பேஸ்ட் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹோட்டல்கள் மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் பொருட்கள் விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அடிக்கடி திடீர் சோதனையில் ஈடுபட்டு தரம் இல்லாத பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடைகளில் பிரபல நிறுவனங்களின் பெயரில் கிடைக்கும் இஞ்சி பேஸ்ட் போல ஹைதராபாத்தில் சில நபர்கள் பாக்கெட்டுகளில் போலியாக இஞ்சி பேஸ்ட் தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் சென்ற அதிகாரிகள் அதை பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள பொருட்களின் மதிப்பு 2 லட்சம் ரூபாய் என்பது தெரியவந்துள்ளது. உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் செயற்கையான உணவுப் பொருட்கள் மற்றும் வண்ணம், பசை ஆகியவற்றை கலந்து இந்த போலி இஞ்சி பேஸ்ட் தயாரிக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 3 டன் அளவில் போலி இஞ்சி பேஸ்ட் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.