Advertisment

ஆட்சியர் வளாகத்தில் குளிர்பானத்தில் விஷம் கலந்து அருந்திய இளைஞரால் பரபரப்பு! 

tt

Advertisment

கரூர் மாவட்டம், தென்னிலை பகுதிக்கு உட்பட்ட ஆவுத்திபாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் இளைஞர் நல்லசிவம். இவருக்கு சொந்தமாக தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தின் அருகில் உள்ள நிலத்தின் உரிமையாளர், நல்லசிவத்தின் நிலமும் தனது இடம் எனக் கூறி ஆக்கிரமித்துள்ளார். கடந்த ஒரு வருடமாக மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கும், காவல் நிலையத்திற்கும் அலைந்து மனு கொடுத்துள்ளார் நல்லசிவம். ஆனால், எவ்வித பயனும் இல்லாத காரணத்தினால், இன்று மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள் மன விரக்தியில் குளிர்பானத்தில் பூச்சி மருந்தை கலந்து அருந்தியுள்ளார்.

இதனை அறிந்த காவல்துறையினர் உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் வரவழைத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்துள்ளனர். கரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கோரிக்கை மனு வழங்க வந்த இளைஞர் ஒருவர் விஷம் அருந்திய நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

karur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe