ADVERTISEMENT

பொதுமக்களுடன் சாலை மறியலுக்கு முயன்ற ஆளுங்கட்சி எம்.எல்.ஏவால் பரபரப்பு!

03:15 PM Aug 22, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து பொதுமக்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்த முயன்ற எம்.எல்.ஏவால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 43-வது வார்டு காஜா நகர் பகுதியில், திருச்சி கிழக்கு திமுக சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.‌ ஆய்வின்போது குடிநீர் குழாயில் தண்ணீர் செந்நிறமாக வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். மேலும் மாநகராட்சி பொதுக் கழிப்பிடத்தை ஆய்வு செய்தபோது, அது பலவருடங்களாக பூட்டி மக்களுக்கு பயன்படாமல் இருந்து வருவதை கண்டித்து மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும்படி உத்தரவிட்டார்.

மேலும் 43 வது வார்டு காஜா நகர் குடிசைப் பகுதியில் குடிநீர் போர்வெல் அமைத்து நீர்த்தேக்க தொட்டி வைத்து மக்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் அதை சரி செய்யாமல் போர்வெல் போட்டதோடு நிறுத்தி நீர்த்தேக்கத் தொட்டியை அமைக்காமல் மெத்தனம் காட்டியுள்ளனர். இதனைக்கண்டித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுடன் இனிகோ இருதயராஜ் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து பொன்மலை மாநகராட்சி கோட்ட அதிகாரிகளுக்கு அலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் கூறுகையில், ''கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக கூறிய எனது உத்தரவை கண்டுகொள்ளாமல் விட்டதை கண்டிக்கிறேன், மீண்டும் இந்த பணியினை விரைவாக முடித்து தர வேண்டும் என ஆணையிட்டார். எம்எல்ஏவின் உத்தரவை அடுத்து அப்பகுதியில் அமைக்கப்பட்ட பழைய போர்வெலில் மின்மோட்டார் பொருத்தி 1,000 லிட்டர் நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் வேலை தற்போது நடைபெற்றுக் தண்ணீர் டேங்க் அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT