Excitement as allies gather at the jail gate to welcome Rowdy!

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபலமான ரவுடி சாமி ரவி. வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ள நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சாமி ரவி சிறையிலிருந்து சில வழக்குகளில் பிணையில் வெளியே வர இருந்த நிலையில் குண்டர் தடுப்பு காவலில் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

Advertisment

குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்தாலும் சாமி ரவியின் கூட்டாளிகள் குண்டர் தடுப்புக் காவலை நீதிமன்றம் மூலம் உடைத்து பிணை பெற்று வந்துள்ள நிலையில், இன்று (08/12/2021) புதுக்கோட்டை சிறையிலிருந்து வெளியே வர உள்ளார் என்ற தகவலறிந்து சிறை வாசலில் வரவேற்று திருச்சிக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்ல நூற்றுக்கணக்கான கூட்டாளிகள் சிறை வாசலில் திரண்டதால் போலீசார் பாதுகாப்பைப் பலப்படுத்தியதுடன் சாமி ரவியை மாற்றுப் பாதையில் அனுப்பி வைத்தனர்.

Advertisment

சிறையிலிருந்து வெளியே வரும் ரவுடியை வரவேற்க இத்தனை பேர் வந்திருந்ததைப் போலீசாரும், பொதுமக்களும் வியப்போடு பார்த்தனர்.