Advertisment

10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்துசெய்து ஆல் பாஸ் செய்யக் கோரிக்கை!

10,11,12 ஆம் வகுப்புபொதுத் தேர்வுகளை ரத்து செய்து அனைவருக்கும் தேர்ச்சியளிக்க ஆவணம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்விடுத்துள்ளது.

Advertisment

ss

கரோனா வைரஸ் பரவலிலிருந்து மக்களைக் காப்பாற்ற தீவிர நடவடிக்கைகள் எடுத்து வரும் தமிழ்நாடு அரசைப் பாராட்டி மகிழ்கிறோம். 21 நாள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அவசியமான ஒன்றாக உள்ளது. தமிழ்நாடு அரசு 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி அறிவித்துள்ளது, வரவேற்புக்குரியது. ஆனால் நாளுக்குநாள் கரோனா வைரஸ் விஸ்வரூபமெடுத்துவருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நமக்கு நாமே தனிமைப்படுத்தத் தவறிவிட்டால் சமூகப்பரவலைத் தடுக்கமுடியாது.

பேரிடர் காலக்கட்டத்தில் மக்களைக் காப்பாற்றுவதே முதன்மையான தாகும். உயிரா படிப்பா என்றால் உயிரே முக்கியம் சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும். ஆகையால்10 ஆம் வகுப்புபொதுத்தேர்வு தொடங்கவே இல்லை.11 ம் வகுப்பிற்குக் கடைசித் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு கடைசித்தேர்வில் 34 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை. தேர்வு எழுதாதவர்களுக்கு மறுதேதி அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

http://onelink.to/nknapp

கரோனாவும் மின்னல் வேகத்தில் பரவிவருகிறதென்று சுகாதாரத்துறை அமைச்சர் எச்சாரிக்கை விடுத்துள்ளார். பிரதமரும் உயிர்க்காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் எதிர்கால மாணவர்களின் நிலைக்குறித்து பெற்றோர்கள் பெரும் அச்சத்திலும் மன உளைச்சலிலும் உள்ளார்கள். வீட்டிலேயே முடங்கி உள்ளதாலும் கரோனாவின் பாதிப்பு அறியாமல் குழந்தைகளைப் படிக்க வலியுறுத்துவதாலும்மாணவர்கள் வீட்டைவிட்டு வெளியேறி விடுகிறார்கள். மேலும் மேற்படிப்பு என்னவாகுமோ என்ற குழப்பத்தில் உள்ளார்கள். எனவே 10,11 மற்றும் 12 ஆம்வகுப்புகளின் அனைத்துப் பொதுத்தேர்வுகளையும் ரத்துசெய்து அனைவரும் தேர்ச்சி அறிவித்திடவேண்டுகிறேன்.

மேலும் கரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தபிறகு மாணவர்கள் தங்களின் மேற்படிப்பில் பாடப்பிரிவினைதேர்வு செய்வதற்கு ஏதுவாக அரசே ஒரு சிறப்புத்தேர்வு வைத்து தேர்வுசெய்து கல்லூரிகளில் இடமளிக்கலாம். ஏற்கனவே மருத்துவம், பொறியியல், படிப்புகளுக்கு 1985 ஆண்டில் அன்றைய முதலமைச்சர் அவர்கள் தேர்வுகள் நடத்தியது குறிப்பிடத்தக்கது’’.

exam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe