Advertisment

உயிரைவிட தேர்வு பெரிதல்ல - நடிகர் சூர்யா உருக்கம்!

jk

தமிழ்நாட்டில் நீட் தேர்வு கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில், தேர்வு அச்சம் காரணமாக இதுவரை 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஒரு மாணவி தீக்குளித்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். தமிழ்நாடு அரசு தேர்வு தொடர்பான அச்சத்தைப் போக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. தேர்வெழுதிய மாணவர்களின் தொலைப்பேசி எண்களுக்கு தொடர்புகொண்டு மனநல ஆலோசனை வழங்கப்பட்டுவருகிறது. இருந்தும் மாணவர்கள் அதனை முழுவதும் உள்வாங்காத சூழ்நிலை நிலவுகிறது.

Advertisment

இந்நிலையில், இந்த உயிரிழப்புகள் தொடர்பாக நடிகர் சூர்யா உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எந்த ஒரு கவலையாக இருந்தாலும் சில காலத்துக்குப் பிறகு சரியாகிவிடும்.மனதில் கஷ்டம் இருந்தால் பிடித்தவர்களிடம் மனம்விட்டு பேசுங்கள். நம்பிக்கை, தைரியத்துடன் இருந்தால் அனைத்தும் சாத்தியம். ஒரு தேர்வு உங்கள் உயிரைவிட பெரியது இல்லை. தற்கொலை, உங்களை ரொம்ப பிடித்தவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் வாழ்நாள் தண்டனை. மதிப்பெண், தேர்வு மட்டுமே வாழ்க்கை இல்லை. சாதிக்கிறதுக்கு அத்தனை விஷயங்கள் இருக்கு. மாணவர்கள் இந்த தற்கொலை எண்ணத்தில் இருந்து மீள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

Surya
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe