az

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டார் என சில ஆண்டுகளுக்கு முன்பு கலைஞரால் நீக்கப்பட்டார். கலைஞர் மறைவுக்கு பின் தன்னை கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்மென தனது சகோதரரும், திமுக தலைவருமான ஸ்டாலினுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். ஸ்டாலின் தரப்பில் அழகிரியின் கோரிக்கை கண்டுக்கொள்ளாத நிலையில் தமிழகம் முழுவதும் திமுகவில் பல்வேறு காரணங்களால் ஓரம்கட்டப்பட்டவர்களை அழகிரி அணி திரட்டுகிறார்.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு சேர்ந்த சரவணன் என்பவரை அமைப்பாளராக அழகிரி நியமித்துள்ளார். அவர் செப்டம்பர் 3ந்தேதி இரவு அழகிரியை வாழ்த்தியும், ஊர்வலத்துக்கு வரவேண்டி திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டியிருந்தார்.

an

Advertisment

இது ஸ்டாலின் கோட்டை இங்கு எப்படி போஸ்டர் ஒட்டலாம் என நகரம் முழுவதிலுமுள்ள போஸ்டர்களை திமுக ந.செ கார்த்திவேல்மாறன் தரப்பு தேடித்தேடி சென்று கிழித்துவருகிறது. இது அழகிரி ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுபற்றி அழகிரிக்கு தகவல் சொல்ல அவர் அவுங்களைப்பற்றிய தகவல்களை அனுப்புங்க என்று கூறினாராம்.

நாளை அழகிரி நடத்தும் ஊர்வலத்துக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் இருந்து 10 வேன்களில் சென்னை செல்ல முடிவு செய்துள்ளனர் அழகிரி ஆதரவாளர்கள்.