Advertisment

சலூன் மற்றும் சலவை தொழிலாளர்களுக்கு உதவும் ஓய்வு பெற்ற காவல்துறை டி.எஸ்.பி

r

காவல்துறையில் உதவி ஆய்வாளர், பிறகு ஆய்வாளர், அதன்பிறகு டிஎஸ்பி ஆகிய பணிகளை சிறப்பாக செய்து மக்களிடம் நல்ல பெயர் எடுத்து ஓய்வு பெற்றவர் ராஜேந்திரன். அவர் தற்போது விருத்தாசலத்தில் வசித்து வருகிறார். இவர் ராஜலட்சுமி ஹெச்.பி.கேஸ் கம்பெனி உடன் இணைந்து விருத்தாசலம் நகரில் உள்ள முடிதிருத்தும் தொழிலாளர்கள் மற்றும் சலவைதொழிலாளர்கள் என100 குடும்பத்தினர்களுக்கு அவர்களின் உணவை தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அரிசி மூட்டைகளைவழங்கினார்.

Advertisment

மேற்படி தொழிலாளர்கள் தமிழக அளவில் மிகவும் நலிந்த பிரிவினரை சேர்ந்தவர்கள். கரோனா பாதிப்பினால் அவர்கள் தொழில்கள் முடங்கிக் கிடக்கின்றன. அதிலும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் அவர்களது தொழிலை தற்போது உள்ள சூழ்நிலையில் தொடங்கக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. காரணம் முடிதிருத்தும் கடைகளுக்கு வருபவர்கள் மூலம் சென்னையில் கரோனா நோய் பரவியுள்ளது.

Advertisment

அதேபோன்று தமிழக அளவில் வந்து விடக்கூடாது என்பதற்காக சலூன் கடைகள் திறப்பதை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்டவர்களின் குடும்பங்கள் சிரமப்படக் கூடாது என்ற அடிப்படையில் இந்த உதவியை செய்துள்ளதாக ஓய்வு பெற்ற காவல்துறை டி.எஸ்.பி ராஜேந்திரன் கூறினார்.

saloon
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe