Advertisment

சபரிமலையில் தரிசனம் செய்த முன்னாள் அமைச்சர்; வைரலாகும் புகைப்படம்

ுப

Advertisment

கேரளாவின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான ஐயப்பன் கோயிலில் தற்போது தரிசனத்துக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. தென் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களிலிருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாட்டுக்காகப் பம்பையில் குவிந்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு சபரிமலையில் வழிபாட்டுக்காக அதிகப்படியான கூட்டம் கூடியதால் வண்டிப்பெரியாரில் இருந்து பம்பை வரை வாகனங்கள் நகர முடியாத அளவுக்கு வாகன நெரிசல் ஏற்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு வயதான முதியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு மட்டும் தனி வரிசை அமைக்கப்பட்டுக் கூட்ட நெரிசல் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

தினசரி தரிசனத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. நாள் ஒன்றுக்கு 90 ஆயிரம் பேர்வரை மட்டுமே தரிசனம் செய்ய முன்பதிவு அனுமதிச்சீட்டு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்திலிருந்து முக்கிய பிரபலங்கள், அமைச்சர்கள் எனத் தொடர்ந்து சபரிமலைக்குச் சென்று தரிசனம் செய்து வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் சேகர்பாபு தரிசனம் செய்தநிலையில், இன்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் தரிசனத்திற்காக அங்கு வந்துள்ளார். அவருடன் அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்கள். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

sabarimala
இதையும் படியுங்கள்
Subscribe