Skip to main content

7 முறை நிலைப்பாட்டை மாற்றிய ஓ.பி.எஸ் எப்படி தலைவராக முடியும்? - ஆர்.பி. உதயகுமார் கேள்வி

Published on 20/08/2022 | Edited on 20/08/2022

 

I

 

கடந்த ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் வழக்கை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பியது. அதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தீர்ப்பை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் சில தினங்களுக்கு முன் வழங்கினார். அதில் அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முன் இருந்த நிலையே நீடிக்கும். எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச் செயலாளராக தேர்வு செய்தது செல்லாது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்துதான் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்த வேண்டும். தனிக் கூட்டம் நடத்தக் கூடாது. பொதுக்குழுவை கூட்ட ஆணையாளர் நியமிக்க வேண்டும் என்றால் நீதிமன்றத்தை நாடலாம். அதுபோல அந்த கூட்டத்தில் ஓ.பி.எஸ் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 


இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை மறுநாள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பன்னீர் செல்வம் தொடர்பாக கடுமையான கருத்துக்களைப் பதிவுசெய்துள்ளார். அதில், "அம்மா மறைவுக்கு பிறகு இதுவரை 7 முறை தன்னுடைய நிலைப்பாட்டை பன்னீர்செல்வம் மாற்றிக்கொண்டுள்ளார். அடிக்கடி தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் அவர் எப்படி தலைவராக முடியும். எடப்பாடி எடுக்கும் எந்த முயற்சிக்கும் இவர் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. தொடர்ந்து ஒத்துழையாமை இயக்கம் நடத்தி வருகிறார். இவரை நம்பிச் செல்ல முடியாது என்ற நிலையை தொண்டர்கள் எடுத்துவிட்டார்கள். அவருக்கு தொண்டர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்பது ஆண்டிகள் சேர்ந்து மடம் கட்டுவதைப்போல் அல்லாமல்  அது செங்கோட்டையாக இருக்க எப்போதும் வாய்ப்பில்லை" என்றார். 
 

 

சார்ந்த செய்திகள்