Skip to main content

மின்வாரிய ஊழியரை தாக்கிய அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினரை கைது செய்யக் கோரி காவல்நிலையம் முற்றுகை!

Published on 10/01/2020 | Edited on 10/01/2020

 சிதம்பரம் நடராஜர் கோயிலில் வரும் 9- ந்தேதி தேர் திருவிழா நடைபெறுகிறது. இதற்கு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சிதம்பரம் நான்கு வீதிகளிலும் மரங்களில் உள்ள கிளைகளை வெட்டிஅப்புறப்படுத்தி வந்தனர். இந்நிலையில் கீழ வீதியில் உள்ள முன்னாள் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்வி ராமஜெயம் மருமகன் கீழ வீதியில் மருந்து கடை வைத்துள்ளார்.இந்த கடையின் முன்பு உள்ள மரத்தின் கிளைகளை பாலசந்தர் என்ற மின்சார ஊழியர் வெட்டி அப்புறப்படுத்தினார். அப்போது ஏன் என்னுடைய அனுமதி இல்லாமல் என் வாசலில் உள்ள மரத்தை வெட்டுகிறீர்கள் என்று முன்னாள் அமைச்சரின் மருமகன் சத்தம் போட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

 

fgh



இதனை தொடர்ந்து செல்வி ராமஜெயத்தின் மருமகனின் தம்பி ரமேஷ் மற்றும் அவரது நண்பர்கள் முத்து உள்ளிட்ட ஐந்து பேர் கூட்டாக சேர்ந்து   ஊழியர் பாலசந்தரை சரமாரியாக தாக்கியதாக கொலை மிரட்டல் விடுத்தனர் என்று  மின்சார ஊழியர்கள் அனைவரும் ஒன்று திரண்டு சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் மீது  நடவடிக்கை எடுக்காததால் காவல் நிலையத்தை மின்சார ஊழியர்கள் அனைவரும் முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் சாலை மறியலிலும் ஈடுபட முயற்சித்தனர். அவர்களை காவல்துறையினர்  சமாதானப்படுத்தினர். தாக்குதலுக்குள்ளான பாலகிருஷ்ணன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தாக்கப்பட்ட பாலகிருஷ்ணன் கூறுகையில், " எங்கள் உயர் அதிகாரியின் உத்தரவின்பேரில் நாங்கள் பணி செய்து கொண்டிருந்தோம். எங்களை முன்னாள் அமைச்சரின் உறவினர் ரமேஷ் என்னையும், உயர் அதிகாரிகளையும் கடுமையான வார்த்தைகளால் ஆபாசமாக திட்டினார். அவர்கள் உன்னால் என்ன செய்ய முடியும்,  முடிந்ததை செய்து பார் என்று கொலைமிரட்டல் விடுத்து நாங்கள் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் என்று என்னை தாக்கினார்கள். இதுதொடர்பாக சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். நடவடிக்கை எடுக்கவில்லை. ஊழியர்களின் போராட்டத்தால் கொலைமிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்" என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'அரசியல் வேறுபாடு வன்முறையாக மாறக்கூடாது'- கல்வீச்சுக்கு முதல்வர் கண்டனம்

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
'Political difference should not turn into violence'- CM condemns stone pelting

ஆந்திராவில் தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கல் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனால் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வர இருக்கிறது. இதனால் அங்கு அரசியல் கட்சிகளால் தீவிர பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தனித்து களம் காண்கிறது. இதனையொட்டி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்த தேர்தல் பரப்புரையில் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல்வீசப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இந்தச் சம்பவத்திற்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், 'ஆந்திர முதல்வர் மீது கல் வீசப்பட்டதைக் கண்டிக்கிறேன். அரசியல் வேறுபாடுகள் வன்முறையாக மாறக்கூடாது. ஜனநாயக செயல்பாட்டில் ஈடுபடும் போது நாகரீகத்தையும், பரஸ்பர மரியாதையையும் நிலைநாட்டுவோம். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்; வைரலாகும் வீடியோ

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Attack on students engaged in prayer; A viral video

அண்மையில் டெல்லியில் சாலையில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை போலீஸ் அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு கொடூர தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கண்டனத்தை பெற்று வருகிறது. குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.