ex minister jeyakumar new year wishes

Advertisment

2022 ஆம் ஆண்டு நிறைவடைந்து2023 ஆம் ஆண்டு பிறந்துள்ளதால், நாடு முழுவதும் ஆங்கிலப்புத்தாண்டை பொதுமக்கள்கோலாகலமாகக்கொண்டாடி வருகின்றனர். 2 ஆண்டுகளுக்குப் பிறகு கொரோனாவிற்கு முந்தைய உற்சாகத்துடன்நாட்டுமக்கள்குடும்பத்துடன்கேக்வெட்டி ஆட்டம், பாட்டம்எனக் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். புத்தாண்டையொட்டி குடியரசுத்தலைவர், பிரதமர், அரசியல் தலைவர்கள்,முக்கியப் பிரமுகர்கள்,திரைப்பிரபலங்கள் எனப் பலரும் தங்களதுவாழ்த்துகளைத்தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர்பக்கத்தில், “விஷ் யூ ஹாப்பிநியூ இயர்” எனப் பதிவிட்டு, தான் பைக்கில் அமர்ந்திருக்கும்புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.