Advertisment

முந்திரி தோப்பில்  தூக்கில் தொங்கி  முன்னாள் காதல்ஜோடி  தற்கொலை! 

s

கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் என்பவருக்கும், ராமாபுரம் கிராமத்தை சேர்ந்த தேவிஸ்ரீ என்பவருக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. அதேசமயம் திருமணமான ஒரு மாதத்திலேயே, கடந்த மாதம் சிலம்பரசன் தனது மனைவி ஸ்ரீதேவி காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் தேடி வந்தனர்.

Advertisment

s

இந்நிலையில் நெய்வேலி அடுத்த மேற்கு இருப்பு கிராமத்தில் ஜெயகாந்தி என்பவரின் முந்திரி தோப்பில் இருவர் ஒரே நைலான் கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் தேவஸ்ரீயும், ராமாபுரத்தை சேர்ந்த ராமநாதன் மகன் ராம்குமார் என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததும், பெற்றோர்கள் சம்மதிக்காததால், வேறு ஒருவருடன் திருமண ஆன நிலையில், திருமண வாழ்வை துறந்து முன்னாள் காதலனுடன் தூக்கு போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Advertisment

பின்னர் இருவரின் பிரேதத்தை கைப்பற்றி உடல்கூறு ஆய்விற்கு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

suside love
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe