இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன்குமார். இவர் இந்திய கிரிக்கெட் அணி சார்பில் 6 டெஸ்ட் போட்டிகளிலும், 68 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளிலும் விளையாடி ஓய்வு பெற்றுள்ளார். இவர் தற்போதுரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதுடன் உணவகம் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், உத்திரப் பிரேதச மாநிலம் மீரட்டில் தனது மகனுடன் சொகுசு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் வேகமாக வந்த டிரைலர் லாரி பிரவீன்குமார் வந்து கொண்டிருந்த கார் மீது மோதியது. இந்த விபத்தில்கார் கடுமையாகச் சேதமடைந்துள்ளது. காரில் இருந்த பிரவீன்குமாரும்அவரது மகனும் காயமின்றி தன்வாய்ப்பாகஉயிர் தப்பினார்கள்.