Advertisment

இளம்பெண்ணை கடத்த முயன்ற முன்னாள் காதலன்; கால் டாக்சி ஓட்டுனருடன் கைது

An ex-boyfriend who tried to kidnap a young woman; Call taxi driver arrested

கால் டாக்ஸியில் போலியான நம்பரை பொருத்தி இளம் பெண்ணை இளைஞர் கடத்த முயன்ற சம்பவத்தில் கடத்தப்பட்ட பெண்ணின் முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

சென்னை திருவான்மியூரை சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணும் பிரசாந்த் என்ற இளைஞரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் பிரசாந்தின் நடவடிக்கை பிடிக்காததால் பவித்ரா அவரை விட்டு விலகிவிட்டார். இதனால் பவித்ராவை கடத்திச் சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்த பிரசாந்த் கால் டாக்ஸி ஓட்டுநர் ஒருவரை அணுகி காதலியை கடத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக கார் நம்பர் பிளேட்டை மாற்றிய பிரசாந்த், கால் டாக்சி ஓட்டுனருடன் பவித்ரா பணியாற்றும் இடத்திற்கு சென்றுள்ளார்.

Advertisment

வேலை முடிந்து வெளியே வந்த பவித்ராவை இருவரும் கடத்த முயன்றனர். அதேநேரம் வேலையில் இருந்து வீட்டிற்கு வரும் பவித்ராவை கூட்டிச்செல்ல அவரது தாயும் அங்கே வந்திருந்தார். மகளை வலுக்கட்டாயமாக இருவர் காரில் ஏற்ற முயன்றதைக் கண்டு கூச்சலிட்ட பவித்ராவின் தாயை பிரசாந்த் கத்தியால் தாக்கியுள்ளார். இதனால் அங்கு கூடிய பொதுமக்கள் கால் டாக்ஸி ஓட்டுநர் மற்றும் பிரசாந்தை பிடிக்க முயன்றனர். கார் டாக்ஸி ஓட்டுநர் ஹனிபா மட்டும் பிடிபட்ட நிலையில் பிரசாந்த் தப்பி ஓடிவிட்டான். இந்த சம்பவத்தில் பிரசாந்தையும் கைது செய்தபோலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

car Chennai police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe