Advertisment

திருமணத்திற்கு வந்த முன்னாள் காதலன்; பூவே உனக்காகவின் அதே தருணம்

 ex-boyfriend who got married; The same moment as Poove unakkaga

காதலியின் திருமணத்திற்கு வந்த முன்னாள் காதலன் திருமண ஜோடிக்கு மலர்க்கொத்து கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்த சம்பவம் திருத்தணியில் நிகழ்ந்துள்ளது.

Advertisment

திருத்தணியில் கோவில் ஒன்றில் நடந்துகொண்டிருந்த திருமண நிகழ்வுக்கு வந்த இளைஞர் 20க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கூட்டி வந்து அவர்கள் கையில் பூங்கொத்தை கொடுத்து வாழ்த்தியதோடு மணமகனுக்கு தானும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். போட்டோவிற்கு போஸ் கொடுத்த அவர் அங்கிருந்து நகர்ந்த பொழுது மணமகனிடம் 'ஆல் தி பெஸ்ட்' என சொல்லிவிட்டு மணப்பெண்ணை மட்டும் கண்டுகொள்ளாமல் அங்கிருந்து சென்றார். இறுதியில் அவர் அப்பெண்ணை காதலித்துவந்தவர்என்பது தெரியவந்தது.

Advertisment

பின்னர் கூட்டி வந்த குழந்தைகளுடன் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''என் பெயர் சரவணன் பழனிசாமி.ஏன் இந்த திருநாளில் வந்திருக்கிறோம் என்றால் நானும் அந்த பெண்ணும் 7 வருஷம் லவ் பண்ணினோம். அவங்க இன்னொரு நல்ல வரன் கிடைச்சதால சென்றுவிட்டார்.இந்த மாதிரி தருணத்தில் இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால் இந்த காதல் அல்லது ஒருதலைக்காதலை விட்டுவிட்டு போனார்கள் என்றால் எந்த மாதிரி தப்பான முடிவும் எடுக்கக்கூடாது. அவர்கள் எங்கிருந்தாலும் சந்தோஷமாக இருக்க வேண்டும். ஒருதலைக்காதலில் ட்ரெயின்ல இருந்து தள்ளிவிடுறாங்க; கழுத்தறுக்குறாங்க; பெண்ணை மானபங்கம் செய்றாங்க; ஆசிட் அடிக்கிறாங்க. ஆனால் அப்படியெல்லாம் நடந்துகொள்ளாமல் அவங்க எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்னு நினைக்கணும், அவங்கள மதிக்கணும்'' என்றார்.

love incident thiruthani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe