Skip to main content

“யானையுடன் சுண்டெலியை ஒப்பிடுவது எப்படி சரியாகும்” - ஓ.பி.எஸ்ஸை விமர்சித்த திண்டுக்கல் சீனிவாசன்

Published on 22/01/2023 | Edited on 22/01/2023

 

ex admk minister dindigul srinivasan talk about ops

 

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பத்தில் கட்சி நிர்வாகிகளான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமராஜ் மற்றும் கூடலூர் நகர கழக செயலாளர் அருண்குமார் ஆகியோர் இல்ல திருமண விழாவிற்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை வருகை தர உள்ளார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர்.

 

ஆனால் இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிசாமி முதன்முறையாக தேனி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதால் கழக அமைப்புச் செயலாளர் எஸ்.டி.கே. ஜக்கையன் தலைமையில் தேனி நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார், வட புதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அன்னபிரகாஷ், தேனி ஒன்றிய பொறுப்பாளர் நாராயணசாமி, ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு  மிகப் பிரமாண்டமான முறையில் வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

அதன்படி தேனி வடபுதுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புறவழிச்சாலை பிரிவில் கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி  பழனிசாமி அவர்களுக்கு மிகப் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கும் வகையில், கேரள செண்டை மேளங்கள், கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் தமிழ் பாரம்பரிய கலைகளான மேளதாளங்கள் முழங்க சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பூரண கும்ப மரியாதை அளித்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு வரவேற்பு அளிக்க உள்ளனர். 

 

ex admk minister dindigul srinivasan talk about ops

 

இதனைத் தொடர்ந்து இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கம்பம் வரை ஊர்வலமாக அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக வருகை தரவுள்ள கழக இடைக்கால பொதுச் செயலாளரை வரவேற்பதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து கழக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர், கழக அமைப்புச் செயலாளர் எஸ்.டி.கே. ஜக்கையன் தலைமையிலான விழாக்குழுவினரிடம் ஆலோசனை நடத்தினர். மேலும் இடைக்கால பொதுச் செயலாளரை வரவேற்கும் பகுதி, முக்கிய பிரமுகர்கள், கட்சியினர் மற்றும் பொதுமக்களின் வாகன நிறுத்த பகுதி, மேடை அமைய உள்ள பகுதி என தேனி முதல் கம்பத்தில் உள்ள திருமண மண்டபம் வரை அனைத்து பகுதிகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

 

அதன்பின் தேனியில் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சரும் கழக பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, “திண்டுக்கல்  நாடாளுமன்ற  இடைத்தேர்தலில் எம்.ஜி .ஆர். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றது போல, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அமோக வெற்றி பெறும். ஒரு கட்சி என்றால் தேர்தலில் போட்டியிட வேண்டும். ஆனால் தேர்தலில் விட்டு கொடுப்போம் என ஓ.பி.எஸ் கூறுவது விந்தையாக உள்ளது. அதிமுக இரு அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை என்பது பொய்யான தகவல். எங்களோடு ஓ.பி.எஸ்-ஐ ஒப்பிடுவதையே அவமானமாகக் கருதுகிறோம். ஓ.பி.எஸ் சுண்டெலி ஈ.பி.எஸ் யானை. யானையுடன் சுண்டெலியை ஒப்பிடுவது எப்படி சரியாகும்? திமுக ஆட்சியில் மக்களுக்கு தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றாமல் அல்வா கொடுத்தது குறித்து இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்வோம்”என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மலைக் கிராமங்களுக்கு குதிரை மூலம் வாக்கு பெட்டி அனுப்பி வைப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் ஒவ்வொரு தேர்தலின் போதும் சாலை வசதி இல்லாத, போடி சட்டமன்ற தொகுதியிலிருந்து குதிரை மற்றும் கழுதை மூலம் வாக்கு பெட்டிகளை அனுப்பும் அவலம், கடந்த 40 ஆண்டு களாக நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெறும் 18 வது மக்களவை உறுப்பினர் தேர்தலிலாவது எங்களுக்கு சாலை வசதி அமைத்து தர வேண்டுமென இப்பகுதி மலைக் கிராம மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்தியாவில் 18 வது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில் தேனி மக்களவைத் தேர்தலின் போது வாக்குச்சாவடிகளுக்கு 40 வகையான உபகரணங்கள் கொண்ட பெட்டிகள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

இந்நிலையில் போடி சட்டமன்ற தொகுதியில் உள்ள பெரியகுளம் பகுதியில் அகமலை, ஊத்துக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் போடி பகுதியில் கொட்டகுடி, குரங்கணி, டாப் ஸ்டேஷன் சென்ட்ரல், கொழுக்குமலை, அண்ணாநகர் உள்ளிட்ட 10 மலைக் கிராமங்களுக்கும் வாக்குப்பட்டி அனுப்பும் பணி போடி தாலுகா அலுவலகத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட 40 உபகாரணங்கள் கொண்ட பொருள்கள் அனுப்பப்பட்டது.

குறிப்பாக தேனி பாராளுமன்ற தொகுதி, ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இந்நிலையில் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 315 வாக்குச்சாவடிகள் இருக்கிறது. இந்த நிலையில் இன்று வாக்குப்பட்டி மற்றும் வாக்குப்பதிவு இயந்திரம் வாக்குப்பதிவுக்கு தேவையான 40 பொருட்கள் உள்ளடங்கிய உபகரணங்கள் உள்ளிட்டவைகளைத் தேர்தல் நடத்தும் அலுவலர் குமரவேல் தலைமையில் அனுப்பப்பட்டது. அதன்படி போடி தொகுதியில் உள்ள 10 மலைக் கிராமங்களுக்கு வாக்குப்பட்டி அனுப்பப்பட்டது.

Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

மலைக் கிராமங்களான காரிப்பட்டி, கொட்டகுடி, குரங்கணி  அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் மூலமாகவும் சென்ட்ரல் மற்றும் அகமது பகுதிகளுக்கு குதிரை மற்றும் கழுதை மூலமாகவும் வாக்குப்பட்டி அனுப்பப்பட்டது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பட்டி மதியம் 2 மணி அளவில் வாக்குப்பதிவு அலுவலர், வாக்குச்சாவடி பொறுப்பாளர் மற்றும் பி1 பி2 பி3 ஆகியோர்களுடன் வாக்குப்பட்டி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் குதிரை மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.