EVKS Ilangovan MLA  came to the assembly.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கடந்த மாதம் 15 ஆம் தேதி சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டார்.

Advertisment

தொடர் சிகிச்சையில் இருந்த அவருக்கு கரோனா தொற்று இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்திருந்தது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், 'ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு இதயத் தமனி நோய் மற்றும் லேசான கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அவர் நன்றாகக் குணமடைந்து வருகிறார்’ எனக் கூறப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில் சிகிச்சைகள் முடிந்து 22 நாட்களுக்குப் பிறகு கடந்த 6 ஆம் தேதி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படிவீட்டில் ஓய்வெடுத்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், இன்று சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மானியக் கோரிக்கை விவாதத்திற்கு வந்துள்ளார்.