Advertisment

ஒபிஎஸ் மகனை அவரது ஊரிலேயே தோற்கடிப்பேன்!-இவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி!

தேனி பாராளுமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமார்,அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தங்க தமிழ்ச்செல்வன்,காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனும் போட்டிபோட இருக்கிறார்கள் இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான முன்னாள் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் பத்திரிகையாளர்கள் சில கேள்விகளை முன் வைத்தனர்.

Advertisment

evks ilango

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

கேள்வி ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் உங்களை எதிர்த்து போட்டி போட இருக்கிறார்களே?

Advertisment

என்னை எதிர்த்து போட்டி போடுபவர்களை நான் போட்டியாகவே கருதுவதில்லை. என்னைப் பொறுத்த வரையில் நான் சுடுகாட்டில் தியானம் செய்து அரசியல் செய்பவனல்ல அல்லது கிளி ஜோசியம் பார்த்து அரசியல் செய்பவன் அல்ல நல்ல மக்களின் குறைகளை அறிந்து அதை தீர்ப்பதற்காக பாடுபடுகின்ற ஒரு அரசியல்வாதியாக இருக்கிறேன். எனது 50 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் கறைபடாத கரங்களுக்கு சொந்தக்காரனாக இருக்கிறேன். நான் தேனியில் போட்டியிட வேண்டும் என்று தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டிருக்கிறார். கண்டிப்பாக போட்டி போடுவதுடன் மட்டுமல்லாமல் மிகப்பெரிய வெற்றியை நான் பெருவேன். காரணம் மக்கள் இன்றைக்கு மதவாத சக்திகளுக்கும் ஊழல்வாதிகளுக்கு ஆதரவு அளிப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறகாரணத்தால் மிகப்பெரிய வெற்றியை நான் பெற இருக்கிறேன்.

தேனியில் உள்ள தேனி பாராளுமன்ற தொகுதியில் பெரியகுளம், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் வருகிறது. அது ஏற்கனவே அதிமுக வெற்றி பெற்ற தொகுதி. அதோடு ஓபிஎஸ் தகுதியான போடி தொகுதியும்உள்ளது. அப்படி இருக்கும்போது நீங்கள் எப்படி இந்த சவாலை தேர்தல் களத்தில் எதிர் கொள்ள போகிறீர்கள்?

என்னைபொருத்த வரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையே சந்தித்தவன் நான் எனவே துணை முதல்வரான ஓபிஎஸ்சை கண்டு நான் பயப்பட போவதில்லை அவர்களை அவர்களுடைய இடத்திலேயே வைத்து தோற்கடிப்பேன்

தேர்தல் பிரச்சாரத்தை எப்போது தொடங்கபோகிறீர்கள்?

தேர்தல் பிரச்சாரத்தை தொகுதியில் உள்ள கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து அவர்களுடைய ஆலோசனைக்கு பின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறேன் என்று கூறினார்.

congress evks ilangovan ops son P Raveendranath Kumar Theni
இதையும் படியுங்கள்
Subscribe