ADVERTISEMENT

“கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமையும்”  - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 

06:11 PM Apr 27, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

“கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமையும்” என காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “என்னுடைய பொதுவாழ்வில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர்களில் ஒருவரான அன்னை சோனியா காந்தி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகிய மூவருக்கு கடமைப்பட்டுள்ளேன். என் வாழ்நாள் முழுவதும் அவர்களை மறக்கமாட்டேன். என் உயர்விற்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்தவர்கள்.

திருமகன் ஈவெரா சாலை எனப் பெயர் வைத்ததற்கு அமைச்சர் முத்துசாமிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். திருமகன் ஈவெரா விட்டுச்சென்ற பணிகளை அமைச்சர் முத்துசாமியுடன் இணைந்து நிறைவேற்றுவேன். அமைச்சர் முத்துசாமி ஈரோடு மேற்கு தொகுதிக்கு மட்டும் அல்லாமல் ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் எம்எல்ஏவாக உள்ளார்.

ஈரோடு பகுதியில் பால் உற்பத்தியை அதிகரித்த எஸ்.கே. பரமசிவம், கோபி சட்டமன்ற முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமண ஐயர் ஆகிய இருவருக்கும் சித்தோடு மற்றும் கோபியில் சிலை வைக்க வேண்டும். இது தொடர்பாக அமைச்சர் முத்துசாமியிடம் கோரிக்கை வைத்துள்ளேன். இத்தனை ஆண்டுகளாக கோபி எம்.எல்.ஏ.வாக இருக்கக்கூடியவர் (அதிமுக செங்கோட்டையன்) ஓரக்கண்ணில் பார்த்துவிட்டு செல்லவேண்டியவராகவே இருக்கும் நிலையில் அங்கு உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை. ஆனால் அமைச்சர் முத்துசாமி ஈரோட்டுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளார். கர்நாடகாவில் நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோகமாக வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும்” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT