Advertisment

விஜய் காங்கிரஸ் அல்லது திமுகவில் சேர்ந்துவிட வேண்டியதுதானே..? - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 

EVKS  elangovan questioned Should Vijay join Congress or DMK

ஈரோட்டில் மாநகர் மாவட்ட மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் மகளிர் தலைவி ஹசீன சையத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் செய்தியாளரிடம் பேசிய கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாவது;

Advertisment

"தமிழகத்தில் மதுக்கடைகளை மூடினால் பாதிக்கப்படும் பெயர்களில் முதலில் சீமான் பெயர் தான் இருக்கும். அவர் பாதிக்கப்படக் கூடாது என்ற அக்கறை உள்ளது. மதுவிலக்கு ஒரு மாநிலத்தில் மட்டும் செய்துவிட முடியாது. முழுமையான மது விலக்கு இந்தியாவில் இருந்தது இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் பர்மீட் முறையில் மது விலக்கு இருந்தது. முழுமையான மது விலக்கு வேண்டும் என்று சொன்னால் மக்கள் தாங்கள் செய்யும் தவறுகளை உணர்ந்து திருந்தினால் மட்டுமே மது விலக்கு முழுமையாக கொண்டு வர முடியும். மதுக்கடைகளை அதிகமாக மூடினால் கள்ளச்சாராயம் காய்ச்சப்படும், சாராயம் குடித்துப் பழகியவர்கள் 80%பேர் அடிமையாக உள்ள நிலையில் சாராயம் கொடுக்கவில்லை என்றால் மனம் உடல்நிலை கெட்டுப் போய்விடும். கடுமையான பிரச்சாரம் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி முயற்சி செய்ய வேண்டும்.

Advertisment

மது விலக்கு என்று சொல்லும் குஜராத் பீகார் மாநிலத்தில் சாராயம் ஆறு போல ஓடிக்கொண்டு இருக்கிறது. மது விலக்கு மக்கள் திருந்த வேண்டும்; மக்கள் திருந்தப் பிரச்சாரம் செய்ய வேண்டும். ஜம்மு காஷ்மீர் தேர்தலில் பாஜக வெற்றி பெற முடியாது காங்கிரஸ் தலைமையிலான நல்ல ஆட்சி அமையும் சூழல் அமைந்துள்ளது. அதிமுக ஓட்டு வங்கி விஞ்ஞான ரீதியாக இபிஎஸ் 10% சரிந்ததுள்ளது என்று சொல்கிறார்கள். ஆனால் வாக்கு வங்கி சரிந்துள்ளது. பெருந்தன்மையுடன் 10%என்று இபிஎஸ் சொல்கிறார். ஆனால் 30%வாக்கு வங்கி அதிமுகவில் இல்லை. அதிமுக தொண்டர்கள் 80% கட்டுக்கோப்பாக இருந்தாலும் அதிமுக பாஜகவுடன் வைத்திருந்த தொடர்பு காரணமாக வாக்கு வங்கி சரிந்து கொண்டே வருகிறது.

நடிகர் விஜயை என் மகனாக பார்க்கிறேன் அவருக்கு சொல்வதென்றால் இப்போது எல்லோருடைய வீட்டுப் பிள்ளையாக நடிகர் விஜய் உள்ள நிலையில் சின்ன வட்டத்தைப் போட்டுக்கொண்டு அதில் இருப்பேன் என்று சொன்னால் யார் அதை ஏற்றுக்கொள்ளவார். நடிகர் விஜய் முதலில் எதற்காகக் கட்சி ஆரம்பிக்கிறார்? காங்கிரஸ் பேரியக்கம் நாட்டு மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கவும் உலக வல்லரசு நாடாக இந்தியா வலிமை பெற வேண்டும் என்ற கொள்கையில் தொடங்கப்பட்டது. அதே வழியில் தமிழ் மொழி வாழவும் தமிழ்நாடு மிகப்பெரிய வளர்ச்சி பெற வேண்டும். இந்தி திணிப்பு கூடாது என்பதற்காகத் தான் திராவிட கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

ஒவ்வொரு கட்சியும் தொடங்குவதற்கு ஆரம்பிக்கப்பட்ட குறித்து மூலக்கரு உள்ளது. ஆனால் இதெல்லாம் விஜயக்கு புரியவில்லையோ நடிகர் விஜய் கொடியை அறிவித்த நிலையில் கொடியில் சொல்ல வருவது என்ன இரண்டு யானைக்கு என்ன விளக்கம் சொல்லவில்லை. கொள்கைகள் அறிவிக்காமல், சொல்லாமல் எப்படி மாநாடு நடத்தப்படுவது பதவி மீது ஏதாவது ஆசை இருந்தால் வெளிப்படையாக சொல்லிவிட்டுச் செல்ல வேண்டிய தானே. நீட் எதிர்க் கூடியவர் பெண் சுதந்திரம் என்று சொல்லக்கூடிய நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சியில் இணைந்து விட வேண்டும். நடிகர் விஜய் சொல்லும் கொள்கைகள் காங்கிரஸிலும் திமுகவில் இருக்கும் நிலையில் எது பிடித்ததோ அதில் இணைந்து விட வேண்டியதுதானே எதற்காக தனி ராஜ்யம்; ராஜ்யம் இல்லாமல் எங்கே தனி ராஜ்யம் எங்கே செய்யப்போகிறார். விவசாயிகள் நலம்பெற வேண்டும் என்றால் கள்ளுக்கடை திறப்பதில் தவறில்லை. கமல்ஹாசன், டி ராஜேந்திரன், குமாரிமுத்து, கருணாஸ் ஆகிய எல்லோரும் ஆரம்பித்து வீட்டுக்குப் போய்விட்டார்கள். அதனால் நடிகர் விஜய் கட்சி தேவையற்ற ஒன்று. எனக்குக் கூட அவருடைய நடிப்பை விட டான்ஸ் பிடிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe