evks elangovan congress mla press meet tamil nadu assembly

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த மாதம் 15 ஆம் தேதி சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சையில் இருந்த அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட்டசிகிச்சைகள் முடிந்து 22 நாட்களுக்குப் பிறகு கடந்த 6 ஆம் தேதி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படிவீட்டில் ஓய்வெடுத்து வந்தஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த 12ஆம் தேதிசட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மானிய கோரிக்கை விவாதம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் சட்டமன்றத்திற்கு வந்திருந்து வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டபின்னர் அங்கிருந்து திரும்பி சென்றார்.

Advertisment

இந்நிலையில் நேற்று (21.04.2023) சட்டமன்றத்திற்கு வந்திருந்தஈ.வி.கே.எஸ். இளங்கோவன், காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறைமீதான மானிய கோரிக்கை விவாதத்தில் கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களைச்சந்தித்து பேசுகையில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மானிய கோரிக்கைமீதானவிவாதத்துக்கு பதில் அளித்து பேசுவதை கேட்பதற்காக சட்டமன்றத்திற்கு வந்தேன். கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும். அதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. ராகுல் காந்தியை பொறுத்தவரை அவருடைய தாத்தா மற்றும் பாட்டனார் காலத்தில் இருந்து அவர்களின்குடும்பம் இந்த நாட்டிற்கு சேவை மற்றும் தியாகம் செய்துள்ளனர். பிரமாண்டமான தங்களது ஆனந்த பவன் இல்லத்தை இந்த நாட்டிற்காக கொடுத்தவர்கள். அவர்களை எப்படியாவது அடக்கி விடலாம் என்று நினைத்து சட்டத்தின் பெயரால் எப்படியாவது முடக்கி விடலாம் என்று நினைத்தால் அது கண்டிப்பாக நடக்காது.

Advertisment

தற்போது சட்டமன்றத்திற்கு வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சை கேட்கும்போது மிகவும் நன்றாக இருந்தது. அவரது பேச்சுகலைஞர் பேசுவது போல்இருந்தது. என்னை பொறுத்தவரை எனது பொது வாழ்வில் மூன்று பேருக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். நடிகர் சிவாஜி கணேசன், சோனியா காந்திக்கு கடமைப்பட்டு இருக்கிறேன். அதேபோல் நம்முடைய முதலமைச்சர் பாசத்திற்கும் மரியாதைக்கும் உரிய மு.க.ஸ்டாலினுக்கும் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்" என்று கூறினார்.