Advertisment

எடப்பாடி பழனிசாமியின் சாட்சியப் பதிவு உயர்நீதிமன்றத்தில் தாக்கல்!

Evidence record of Edappadi Palaniswami filed in High Court

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான விவரங்கள் குறித்து அறிந்திருந்தும், அவற்றை மறைத்ததாகக்கூறி கனகராஜின் சகோதரர் தனபால், மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் ஏற்கெனவே போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அதனைத்தொடர்ந்து இருவரும் தற்போது ஜாமீனில் உள்ளனர். இந்த சூழலில் கனகராஜின் சகோதரர் தனபால் செய்தியாளர்கள் சந்திப்பின்போது எடப்பாடி பழனிச்சாமி குறித்து பல்வேறு கருத்துகளைத்தெரிவித்து வந்தார்.

Advertisment

இதனையடுத்து கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புப்படுத்திப் பேச தனபாலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது எடப்பாடி பழனிசாமியின் சாட்சியப் பதிவு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சாட்சியப் பதிவு குறித்த அறிக்கையை வழக்கறிஞர் ஆணையர் எஸ். கார்த்திகை பாலன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மேலும் இந்த வழக்கை பிப்ரவரி 1 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

kodanadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe