Advertisment

"தர்மயுத்தம் முதல் துணை முதல்வர் வரை.." நான் பேசியது அனைத்தும் உண்மை - ஆணையத்தில் ஓபிஎஸ்!

ெந

Advertisment

அப்பல்லோ மருத்துவமனையில் சிசிடிவி கேமராக்களை அகற்ற நான் எதுவும் சொல்லவில்லை என்று விசாரணை ஆணையத்தில் ஓ.பி.எஸ் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மார்ச் 21ஆம் தேதி ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியிருந்தது. எட்டுமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஓபிஎஸ் இன்று முதல் முறையாக ஆஜராகினார். அவரிடம் பல்வேறு கேள்விகள் ஜெயலலிதா தொடர்பாக கேட்கப்பட்டது. பல கேள்விகளுக்கு எனக்குத்தெரியாது, அதுபற்றி என்னிடம் யாரும் கூறவில்லை என்று தெரிவித்ததாக தகவல் வெளியானது.

குறிப்பாக 2016ஆம் ஆண்டு செப்.22ஆம் தேதி ஜெயலலிதா எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற விவரம் தெரியாது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் அவரை நான் பார்க்கவில்லை. மருத்துவமனையில் அவர் சேர்க்கப்படுவதற்கு முந்தைய நாள் மெட்ரோ ரயில் நிகழ்வில்தான் அவரைப் பார்த்தேன். அதற்கு பிறகு பார்க்கவில்லை என்று தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

Advertisment

இந்நிலையில் உணவு இடைவேளைக்குப் பிறகு அவரிடம் நடைபெற்ற விசாரணையில், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அப்பல்லோமருத்துவமனையில் சிசிடிவி கேமராக்களை தான் அகற்றச் சொல்லவில்லை என்றும், எதற்காக அகற்றினார்கள் என தனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் தான் தர்ம யுத்தம் தொடங்கியதில் இருந்து துணை முதல்வராக பொறுப்பேற்கும் வரை நான் பேட்டியில் பேசியது அனைத்து உண்மை என்று பன்னீர் செல்வம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

jayalalitha ops
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe