
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி ஏற்பாட்டின்படி இந்த ஆண்டின் உலக உணவு தினத்தை முன்னிட்டு உணவு பாதுகாப்பு சட்டப்படி செயல்படும் சாலையோர உணவகங்களை ஊக்குவிக்கும் வகையில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் இன்று 'எல்லோருக்கும் எல்லாம்' உணவுத் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்திராக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் தேர்வு செய்யப்பட்ட சாலையோர உணவகங்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் சக்கரபாணி கேடயங்கள் மற்றும் பரிசுகள் வழங்கினார். அதைத்தொடர்ந்து உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை மற்றும் கூட்டுறவுத் துறை சார்பில் அங்கு அமைக்கப்பட்டுள்ள கடைகளை பார்வையிட்டனர்.
அதைத்தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் சக்கரபாணி, ''தென்னிந்திய வர்த்தகம் உணவு சார்பாக நடைபெறுகின்ற 'எல்லோருக்கும் எல்லாம்' சாலையோர பாதுகாப்பு சட்டப்படி நடத்தப்படும் உணவுகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருகை தந்தவர்களை வரவேற்கிறேன். ஐக்கிய நாடுகளில் சாலைகளின் சார்பாக 1779 முதல் ஆண்டுதோறும் உணவுத் திருவிழா அக்டோபர் 16 ஆம் தேதி உணவு திருவிழா நடைபெற்று வருகிறது. அதுவும் குறிப்பாக 150 நாடுகளில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நாமும் ஒருநாள் முந்தியேஇந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம்.

குறிப்பாக இந்த ஆண்டு சிறந்த உற்பத்தி, சிறந்த சத்துணவு, சிறந்த சூழல், சிறந்த வாழ்வு என்பதை நோக்கி செயல்பட வேண்டும் என ஐ.நா.உணவு மற்றும் மேலாண்மை வலியுறுத்தி இருக்கிறது. அந்த வகையில் நமது முதல்வர் வழிகாட்டுதல்படி இந்த ஆண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி இருக்கிறோம். சாலையோர கடை உரிமையாளர்களை வரவழைத்து அவர்களை சிறப்பு செய்வது இதுவே முதல்தடவை என நினைக்கிறேன். தமிழக மக்களுக்கு தங்கு தடையின்றி அனைவருக்கும் உணவுப் பொருள் வழங்குவதற்கும் சத்துணவு உணவு கிடைப்பதற்கும் அரசு பாடுபட்டு வருகிறது. அதேபோல் பசியின்றி, நோயின்றி எல்லோரும் வாழும் வகையில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக ஆக்க முதல்வர் பாடுபட்டு வருகிறார்'' என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)