dmk

Advertisment

இந்தியாவில் இரண்டாம் அலையாக கரோனாபரவி வரும் நிலையில் இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கரோனாதொற்று உறுதியாகியுள்ளது. லேசான அறிகுறி ஏற்பட்டதால் கரோனாபரிசோதனை செய்துகொண்ட அவருக்குகரோனாதொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

இதனைத்தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளராகுல் காந்தி, சமீபத்தில் தன்னோடு தொடர்பில் இருந்தவர்களை, பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும், பாதுகாப்பாக இருக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில் ''சகோதரர் ராகுல்காந்தி கரோனாவால்பாதிக்கப்பட்டது கவலையளிக்கிறது. கரோனாவால்பாதிக்கப்பட்ட ராகுல்காந்திவிரைந்து நலம்பெற வேண்டும். அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும்'' என வேண்டுகோள் விடுத்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.