Skip to main content

''ஒவ்வொரு தமிழ் குடிமகன் தலையிலும் 57 ஆயிரம் ரூபாய் கடனை சுமத்தியுள்ளார்கள்''- டிடிவி தினகரன் பேட்டி 

Published on 14/02/2020 | Edited on 14/02/2020

2020 மற்றும் 21 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை துணை முதல்வரும், தமிழக நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் மீதான உரையை தொடங்கி பல்வேறு திட்டங்கள் மற்றும் நிதி ஒதிக்கீடு விவரங்களை வாசித்து வருகிறார்.

இந்நிலையில் அமமுக துணை பொதுச்செயலாளரும், ஆர்.கே நகர் தொகுதி எம்எல்ஏவுமான டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,

 

"Every Tamil Citizen has Brought 57,000 Rupees on the Head" - TTV Dinakaran Interview

 

நடப்பு நிதியாண்டில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத இறக்கம் தமிழ்நாட்டின் நிதி சூழ்நிலையை சிக்கலான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது என நிதியமைச்சரான ஓபிஎஸ்சே நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளார். மத்திய அரசோடு இணக்கமாக இருந்தால் நிதி கிடைக்கும் என அமைச்சர்கள் கூறிவந்த நிலையில், மத்திய நிதி பகிர்வில் 7500 கோடிக்கு மேல் வரவேண்டி இருக்கிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அறிக்கையை முழுமையாக படித்தோம் என்றால் அடுத்து தேர்தல் வரப்போகிறது என்ற பீதிக்காக  உருவாக்கப்பட்ட அறிக்கையாக உள்ளது தெரியவருகிறது. ஒவ்வொரு தமிழ்நாட்டு குடிமகன் தலையிலும் 57 ஆயிரம் ரூபாய் கடனை சுமத்தியுள்ளனர். அமைச்சர்கள் எல்லாம் ஏன் அடிக்கடி டெல்லி செல்கிறார்கள் என்று தெரியவில்லை.

டெல்டாவை வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளார்கள். ஆனால் அதன் அடுத்தகட்ட வளர்ச்சி பணி குறித்த எந்த அறிவிப்பும் இல்லை எனக் கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தர்மத்துப்பட்டியில் டி.டி.விக்கு வந்த சோதனை 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
The trial came to TTV in Dharmathuppatti

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள்,  அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தேனியில் உள்ள தர்மத்துப்பட்டியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த டி.டி.வி.தினகரன் பரப்புரையை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழியில் வாகனத்தை நிறுத்திய பறக்கும் படை அதிகாரிகள் அவரது வாகனத்தை சோதனை செய்தனர்.