Advertisment

''ஒவ்வொரு அடியும் நீங்கள் அமைத்த படியில்தான் ஏறுகிறேன்''-தமிழக முதல்வர் ட்வீட்!

publive-image

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னாள் முதல்வர் கலைஞரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

Advertisment

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவிடத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி திமுகவின் தலைவராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில் இன்றுடன் நான்கு ஆண்டுகள் முடிவடைகிறது. இந்நிலையில் அதனை வெளிப்படுத்தும் வகையில் இன்று கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியுள்ளார் தமிழக முதல்வர்.

Advertisment

இந்நிலையில் இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ''தகைசால் தந்தையே! தன்னிகரற்ற தலைவரே! முதல்வர்களில் மூத்தவரே! கலையுலக வேந்தரே! எங்களின் உயிரே! உணர்வே! தாங்கள் வகித்த தி.மு.க. தலைவர் பொறுப்பில் நான் அமர்ந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். ஒவ்வொரு அடியும் - நீங்கள் அமைத்த படியில்தான் ஏறுகிறேன். உங்கள் சொற்படியே நடக்கிறேன். அதனால்தான் வென்றபடியே இருக்கிறேன்! மேலும் வெல்ல மேன்மேலும் வாழ்த்துங்கள்!'' என தெரிவித்துள்ளார்.

kalaingar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe