Advertisment

''ஒவ்வொரு நகர்மன்ற உறுப்பினருமே சேர்மன் தான்''-கீழக்கரை நகர்மன்றத் தலைவர் நெகிழ்ச்சி!

 '' Every city council member is chairman ''

Advertisment

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் நகர்மன்றத் தலைவராக பணியை துவக்கினார் சஹானாஸ் ஆபிதா.பணியை தொடங்கும் நிகழ்வில்அவர் பேசுகையில்,

Advertisment

''தமிழக முதல்வர் ஸ்டாலினின் நல்லாட்சியில் நிறையத் திட்டங்கள் நம்முடைய கீழக்கரை பகுதிக்கு வர இருக்கின்றன. மேலும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் ஆதரவோடு கீழக்கரை நகர் செயலாளர் பஷீர் அஹமது அன்போடு, திமுகவினரின் ஒத்துழைப்போடு அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு கீழக்கரை பகுதியில் சுத்தம் சுகாதாரத்தில் முழு கவனம் செலுத்தப்படும். மேலும் கீழக்கரை மக்களின் அன்போடும், ஆதரவோடும் மக்களின் சேவை தொடரும். நம் பகுதியின் ஒவ்வொரு நகர்மன்ற உறுப்பினருமே சேர்மன் தான்'' என நெகிழ்ந்தார்.

நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சேர்மனாக கொண்ட செஹானாஸ் ஆபிதாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

ramanthapuram
இதையும் படியுங்கள்
Subscribe