Skip to main content

சுப நிகழ்ச்சிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளிடம் தகவல் தெரிவிக்க ஆட்சியர் உத்தரவு

Published on 29/06/2020 | Edited on 29/06/2020

 

events

 

திருமணம், காதணி விழா உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளும் மண்டபங்களில் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை தஞ்சை மாவட்டங்களில் தற்போது நடக்க வேண்டிய கோடிகளைக் குவிக்கும் மொய் விருந்துகள் நடத்தவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காரணம் கரோனா தொற்று பரவலைத் தடுக்க பேராவூரணியில் உள்ள மண்டபங்களில் மொய் விருந்துகள் நடத்த அனுமதிக்க வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

 

இந்த நிலையில் தான் திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் குறைவான உறவினர்களுடன் வீடுகளிலேயே நடத்தப்பட்டு வருகிறது. இனி வருங்காலங்களில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்த உள்ளாட்சி அமைப்புகளிடம் தெரிவித்து உரிய அனுமதி பெற வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

 

அதாவது மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கரோனா தொற்று பரவாமல் தடுக்கக் கூட்டம் கூடுவதைத் தவிர்ப்பதுடன் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். மேலும் திருமணம், காதணி விழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்தும் முன்பு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் தகவல் தெரிவித்து கிராம ஊராட்சி மக்கள் வட்டாட்சியரிடமும் பேரூராட்சி, நகராட்சி மக்கள் அந்தந்த நகராட்சி, பேரூராட்சிகளிடமும் அனுமதி பெற்று குறைந்த அளவில் ஆட்களுடன் விழாக்களை நடத்தலாம் என்று அறிவித்துள்ளார்.

 

இது குறித்து கிராம மக்கள் கூறும்போது, நகராட்சி, பேரூராட்சிகளில் சுப நிகழ்ச்சிகள் நடத்த அந்தந்த நிர்வாகத்திடம் அனுமதி வாங்குவது போல கிராம ஊராட்சிகளுக்கு ஊராட்சி அமைப்புகளிடமே அனுமதி பெற உத்தவரவிட வேண்டும். கிராம மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை நாட கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் வழியாகச் செல்லும் போது கால விரயம் ஆகும். அதாவது வருவாய்த் துறையினர் கரோனா சம்மந்தமான பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் சுப நிகழ்ச்சி விண்ணப்பங்களைக் கவனிக்க தாமதம் ஏற்படும். அதனால் கிராம உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்று நடத்த உத்தரவிட வேண்டும் என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார். 

Next Story

ஆடு மேய்க்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
The cruelty that happened to the woman who went to herd the goats; Villagers frozen in fear

தஞ்சாவூரில் ஆடுகளை மேய்க்கச் சென்ற பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அடுத்துள்ளது மனையேறிப்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 48 வயது பெண் ஒருவர், கருமம்குளம் பகுதியில் ஆடுகளை எப்பொழுதும் மேய்ச்சலுக்குக் கொண்டு செல்வது வாடிக்கை. அதன்படி நேற்று மேய்ச்சலுக்கு ஆடுகளை அழைத்துச் சென்ற நிலையில் மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் காணாமல் போனவரைத் தேடி உறவினர்கள் குளக்கரை பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்பொழுது அப்பெண்ணின் செருப்பு மற்றும் அவர் உணவு எடுத்து வந்த பாத்திரம், தண்ணீர் பாட்டில் ஆகியவை மட்டும் தரைப்பகுதியில் கிடந்தது.

இதனால் சந்தேகமடைந்தவர்கள் அக்கம் பக்கத்தில் தேடிய பொழுது அப்பெண் ஆடைகள் களையப்பட்ட நிலையில் ரத்த காயத்துடன் சடலமாகக் கிடந்தார். பின்னர், உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருவேளை அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அச்சத்தையும்  ஏற்படுத்தி இருக்கிறது.